twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காலாவுக்கு கதவு திறப்பு - இரும்புத் திரைக்கு மூடல்!

    By Shankar
    |

    Recommended Video

    ரஜினிக்கு நண்பன் விஷாலுக்கு எதிரியான தியேட்டர் சங்க நிர்வாகிகள்- வீடியோ

    சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் டிஜிட்டல் நிறுவனங்களை கட்டண குறைப்பு செய்யுமாறு வலியுறுத்தி மார்ச் 1 முதல் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் செய்வதை நிறுத்தி வைத்துள்ளனர்.

    இதனால் கடந்த ஒரு வார காலமாக தமிழக திரையரங்குகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. புதிய படங்கள் ரிலீஸ் ஆகாததால்கடந்த ஒரு வார காலத்தில் திரையரங்கு களுக்கு சுமார் 10 கோடி ரூபாய் வியாபார வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இம்முடிவுக்கு ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை என்ற நிலைப்பாட்டை கடைப்பிடித்து வந்தது திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்.

    Straight opening for Kaala

    சென்னையில் பொதுசெயலாளர் ரோகிணி பன்னீர்செல்வம் தலைமையில் சங்கத்தின் அவசர கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் சுப்பிரமணி, ராஜமன்னார், வேலூர் சீனு, தென்காசி பிரதாப் ராஜா மற்றும் 150க்கும் மேற்பட்ட தியேட்டர் அதிபர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னை நகரில் இருந்து யாரும் இக்கூடட்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு எதிராக முக்கியமான முடிவுகள் எடுக்கப்படலாம் என திரையுலகினர் எதிர்பார்த்த நிலையில் தமிழக அரசுக்கு எதிராக போர் கொடி தூக்கி மார்ச் 16 முதல் தமிழகத்தில் தியேட்டர்களை மூடுவது என முடிவெடுத்துள்ளனர்.

    கடந்த வருடம் GST வரி விதிப்புக்கு எதிராகதியேட்டர்கள் மூடப்பட்ட போது தமிழக அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சில கோரிக்கைகள் ஏற்கப்பட்டு அரசு ஆணை பிறப்பிக்கப்படும் என அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாம்.

    இன்று வரை அதற்கான அரசு ஆணை வெளியிடப்படவில்லை. எனவே தமிழக முதல்வரை மீண்டும் சந்தித்து

    1.கேளிக்கை வரி 8% ரத்து செய்யவும்
    2. பெரிய திரையரங்குகளை குறைவான இருக்கை உள்ளதாக மாற்றம் செய்யவும்
    3. வருடந்தோறும் தியேட்டர் உரிமத்தை புதுப்பிக்கும் முறையை 3 வருடங்களு க்கு ஒரு முறை என மாற்றம் செய்யவும்
    4. தியேட்டர் பராமரிப்பு கட்டணமாக குளிரூட்டப்பட்ட அரங்குகளுக்கு ஒரு டிக்கட்டுக்கு 5 ரூபாயும் சாதாரண தியேட்டர்களுக்கு 3 ரூபாயும் நிர்ணயம் செய்து ஆணைகள் பிறப்பிக்கக் கோரி மனு கொடுப்பது

    என்றும் ஒரு வார காலத்திற்குள் மேற்கண்டகோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில் மார்ச் 16 முதல் தியேட்டர்களை மூடுவது என அதிரடியாக முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டுள்ளது.

    அனைத்து வகையிலும் தமிழக அரசை அனுசரித்து தொழில் நடத்த வேண்டிய தியேட்டர் அதிபர்கள் எப்போதும் இல்லாத ஆக்ரோசத்துடன் இப்படி ஒரு முடிவு எடுக்க என்ன காரணம் என உள்வட்டத்தில் விசாரித்த போது கிடைத்த தகவல்கள்:

    "கடந்த ஒரு வார காலமாக எங்கள் பிழைப்பை கெடுத்தது தயாரிப்பாளர்கள் சங்கம்.

    புதிய படங்களை ரிலீஸ் செய்ய மற்ற நிர்வாகிகள் சம்மதித்தாலும் தலைவர் விஷால் டிஜிட்டல் நிறுவனங்கள் கட்டணத்தை குறைக்காத வரை புதிய படம் ரிலீஸ் இல்லை என்பதில் பிடிவாதமாக உள்ளார்.

    மார்ச் 29 அவர் தயாரிப்பில் தயாரான இரும்புத்திரை ரீலீஸ் என்று அறிவித்துவிட்டுத்தான் மார்ச் 1 முதல் புதிய படங்கள் நிறுத்தப்பட்டது.

    இந்த சூழலில் காலா ஏப்ரல் வெளியீடு என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இன்றைய அரசியல் சூழலில் தமிழக அரசு ஆணை உடனடியாக பிறப்பிக்காது.

    பனிரண்டாம் வகுப்பு பொதுதேர்வுகள் நடைபெற்று வருவதால் எந்த படம் வந்தாலும் வசூல் இருக்காது. அதனால் 16 முதல் தியேட்டரை மூடினால் கரண்ட் பில், தினசரி பராமரிப்பு செலவாவகு மிஞ்சும்.

    இரண்டு வார காலம்வேலை நிறுத்தம் பேச்சுவார்த்தை என இழுத்து கொண்டு போய் விட்டால் விஷால் விரும்பினால் கூட இரும்பு திரை ரிலீஸ் செய்ய முடியாது.

    ஏப்ரல் மாதம் காலா மக்கள் கவனத்திற்கு வரும் போது இரும்புத்திரை எப்போது என்று தீர்மானிக்க முடியாது. எனவே 3 மாதம் தள்ளி போக வேண்டி வரும். இதன் மூலம் தொழில் ரீதியாக, பொருளாதார முடக்கத்திற்கு விஷால் ஆளாக வேண்டி இருக்கும்.

    எங்கள் நோக்கம் இரும்பு திரையை முடக்கி நேரடியாக காலாவுக்கு கால்கோள் விழா நடத்தி கல்லா கட்டுவதே," என்கின்றனர் தியேட்டர் சங்க நிர்வாகிகள்.

    English summary
    Theater owners in Tamil Nadu have decided to shunt down theaters from March 16 and open again on April 27th strightly to the release of Kaala.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X