»   »  பா விஜய்யின் ஸ்ட்ராபெர்ரி... சுவை எப்படி?

பா விஜய்யின் ஸ்ட்ராபெர்ரி... சுவை எப்படி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் சற்று ஓய்ந்து போயிருந்த பேய்களை மீண்டும் ஸ்ட்ராபெரி மூலமாக கூட்டி வந்திருக்கிறார் பா.விஜய். இன்று திரைக்கு வந்திருக்கும் ஸ்ட்ராபெரி படத்தில் நாயகனாக நடித்ததோடு மட்டுமின்றி ஒரு இயக்குனராகவும் மாறியிருக்கிறார் பா.விஜய்.

பா.விஜயுடன் இணைந்து சமுத்திரக்கனி, தேவயானி, தம்பி ராமையா, அவ்னி மோடி, ஜோ மல்லூரி, ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி மற்றும் மயில்சாமி என்று ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.


ஸ்ட்ராபெரி என்று ஒரு சுவைமிகுந்த பழத்தின் பெயரை படத்திற்கு வைத்திருக்கின்றனர், பழத்தைப் போலவே படமும் சுவையாக இருந்ததா? என்பதை பார்க்கலாம்.


ஸ்ட்ராபெரி - கதை இதுதான்

ஸ்ட்ராபெரி - கதை இதுதான்

கால் டாக்சி டிரைவரான பா.விஜயுடன் ஒரு ஆத்மா சுற்றுகிறது. இதை, ஆவிகள் குறித்து ஆராய்ச்சி செய்யும் நாயகி அவ்னி மோடியும், அவரது தந்தையுமான ஜோ மல்லுரியும் கண்டுபிடித்து, அந்த ஆவி குறித்த ரகசியத்தை பா.விஜயிடம் தெரிவிக்கிறார்கள். ஆவி ஒன்று தன்னிடம் ஏதோ சொல்ல வருகிறது, என்பதை அறியும் பா.விஜய் அந்த ஆவியுடன் பேசுகிறார்.


ஆவியிடம் பேசிய பிறகு தொழிலதிபர் ஒருவரை கொலை செய்ய பா.விஜய் திட்டம் போடுகிறார். அதே சமயம், ஆவி குறித்து ஆராய்ச்சி செய்யும் ஜோ மல்லூரி, பணத்திற்காக அந்த ஆவியை கட்டுப்படுத்தி, அந்த தொழிலதிபரை காப்பாற்ற முயற்சி செய்வதுடன், அந்த ஆவியை தனது அடிமையாக்க திட்டம் போடுகிறார்.


ஒரு பக்கம் ஆவியின் உதவியுடன் தொழிலதிபரை கொலை செய்ய பா.விஜய் முயற்சிக்க, மறுபக்கம் அந்த தொழிலதிபரோ, ஜோ மல்லூரியின் உதவியுடன் ஆவியைக் கட்டுப்படுத்தி, அந்த ஆவிக்கு துணையாக இருக்கும் பா.விஜயை கொலை செய்ய முயற்சிக்கிறார். இவர்களில் யாருடைய திட்டம் வெற்றி பெற்றது என்பதும், அந்த ஆவி யார்? எதற்காக அந்த தொழிலதிபரை கொலை செய்ய துடிக்கிறது? எதற்காக பா.விஜயுடன் சேர்ந்து இறக்கிறது? என்ற கேள்விகளும் அதற்கான பதில்களும் தான் படத்தின் மீதிக்கதை.நாயகனாக பா.விஜய்

நாயகனாக பா.விஜய்

ஹீரோவாக நடிப்பில் பாஸ் மார்க் வாங்கும் பா.விஜய், நடனத்தில் தடுமாறுகிறார். ஆனால், சண்டைக்காட்சிகளில் அசத்துகிறார்.சமூகத்தில் நடக்கும் சில விஷயங்களை செய்திகளில் படிப்பதோடு நாம் சென்றுவிட, அந்த தவறினால் மேலும் எத்தனை பேர் பாதிக்கப்படுவார்கள், என்பதை உணர்த்தும் வகையில் இப்படத்தின் மையக் கருவை அமைத்திருக்கும் பா.விஜய், பத்திரிக்கையில் வந்த செய்தி ஒன்றை வைத்து, சமூக பிரச்சினையை சொல்லும் ஒரு திரைப்படமாக ஸ்ட்ராபெரியை உருவாகியிருக்கிறார்.நாயகன் மற்றும் இயக்குநர் என 2 விதமான முயற்சிகளை இந்தப் படத்தில் பரிசீலித்துப் பார்த்திருக்கும் விஜய் இரண்டிலுமே ஓரளவு தேறியிருக்கிறார்.


பேயாக குழந்தை யுவினா

பேயாக குழந்தை யுவினா

பேயாக படத்தில் முக்கியப்பங்காற்றியிருக்கிறார் குழந்தை யுவினா. அக்குழந்தை வருகிற காட்சிகள் பதைபதைப்பை ஏற்படுத்துகின்றன, இப்படித்தான் நம் ஊர் என்று இருக்கிறது என்று நினைக்கும்போது ஒரு பதற்றம் தொற்றுவதை நம்மால் தடுக்க முடியவில்லை. ஸ்ட்ராபெரி படத்தை தன் நடிப்பால் உயர்த்திப் பிடித்திருக்கிறார் குழந்தை யுவினா.


சமுத்திரக்கனி - தேவயானி தம்பதி

சமுத்திரக்கனி - தேவயானி தம்பதி

தனது குழந்தையின் இறப்புக்கு நியாயம் கேட்டு போராடும் சமுத்திரக்கனியும், அவரது மனைவியாக நடித்துள்ள தேவையானியும் தங்களுடைய கதாபாத்திரத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளார்கள். குழந்தை மரணத்தை தாங்க முடியாமல் தேவயானி, மனநிலை பாதிக்கப்பட்டவராக நன்றாக நடித்துள்ளார்.மேலும் தேவயானிக்கு சமமாக பொறுப்பான தந்தையின் போராட்டத்தை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார் சமுத்திரக்கனி.


சண்டேக்கும் மண்டேக்கும் சண்டை

சண்டேக்கும் மண்டேக்கும் சண்டை

படத்தில் "சண்டேக்கும் மண்டேக்கும் சண்டை" பாடலும், க்ளைமைக்சுக்கு முன்பு வரும் இன்னொரு பாடலும் ரசிக்க வைக்கின்றன. தாஜ்நூரின் பின்னணி இசை படத்தின் வேகத்தைக் கூட்டுகிறது, பிற்பாதியில்.


ரோபோ சங்கர் + தம்பி ராமையா

ரோபோ சங்கர் + தம்பி ராமையா

ரோபோ சங்கரின் காமெடிக் காட்சிகளின் அளவு குறைவாக இருந்தாலும் நிறைவாக சிரிக்க முடிகிறது. ஒரு சில காட்சிகளில் வரும் தம்பி ராமையாவும் தனது பங்கினை நிறைவாகவே செய்திருக்கிறார். மேலும் இமான் அண்ணாச்சி மற்றும் மயில்சாமி ஆகியோரும் தங்கள் பங்கிற்கு காமெடியில் தொய்வு ஏற்படாமல் காப்பாற்றியிருக்கின்றனர்.


தனி மனிதர்களின் பணவெறி மற்றும் வியாபாரமாகிப் போன கல்விமுறை போன்றவற்றை ஸ்ட்ராபெரி படத்தின் மூலம் அழுத்தமாக எடுத்துக் கூற முயன்று, அதில் ஓரளவு வெற்றியும் கண்டிருக்கிறார் பா.விஜய்!    English summary
    Strawberry movie is written and directed by Pa Vijay, who has also played a character in the flick. Samuthirakani, Thambi Ramaiah, Yuvina Parthavi, Avani Modi, Robo Shankar, Imman Annachi and others are in the cast.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more