»   »  மன அழுத்தத்தை தாங்க முடியாமல் நடிகை தற்கொலை

மன அழுத்தத்தை தாங்க முடியாமல் நடிகை தற்கொலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: பெங்காலி நடிகை ஒருவர் அழுகிய நிலையில் வீட்டில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மன அழுத்தத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

திரையுலகை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது அழகாகக் தெரிகிறது. ஆனால் திரையுலகில் உள்ளவர்களுக்கு தினம் தினம் போராட்டமாக உள்ளது. பட வாய்ப்புகள் கிடைத்தால் மகிழ்ச்சி அடைவோர் வாய்ப்புகள் இல்லாவிடில் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.

Stress kills Bengali actress Bitasta

அதில் சிலர் மன அழுத்தத்தை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இது சின்னத் திரையை சேர்ந்தவர்களுக்கும் பொருந்தும். இந்நிலையில் கொல்கத்தாவில் அழுகிய நிலையில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்ட பெங்காலி நடிகை பிடாஸ்டா சாஹாவின் வழக்கின் முதல் கட்ட விசாரணை குறித்த தகவல் கிடைத்துள்ளது.

கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் பிணமாகத் தொங்கியுள்ளார் பிடாஸ்டா. முதல்கட்ட விசாரணையில் அவர் கடும் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

மன அழுத்தத்தால் அவர் தற்கொலை பற்றி பேசி வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

English summary
According to police, Bengali actress Bitasta Saha has reportedly committed suicide as she was under severe stress.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil