»   »  தொடரும் ஸ்ட்ரைக்... தமிழ் சினிமா பக்கம் ஒதுங்கும் மலையாள நடிகர்கள்!

தொடரும் ஸ்ட்ரைக்... தமிழ் சினிமா பக்கம் ஒதுங்கும் மலையாள நடிகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மலையாளத் திரையுலகில் கடந்த 8 நாட்களாகத் தொடரும் வேலை நிறுத்தத்தால் பல மலையாள கலைர்கள் பிற மொழிப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மலையாள திரைப்பட தொழில் நுட்ப கலைஞர்கள் சங்கமான ‘பெப்கா' தனது தொழிலாளர்களுக்கு 33.5 சதவீதம் சம்பள உயர்வு கேட்டு போராட்டம் நடத்தி வருகிறது. சம்பள உயர்வு வழங்காவிட்டால் படப்பிடிப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் புறக்கணிப்போம் என்றும் எச்சரித்தது. இவர்கள் கேட்டபடி மலையாள தயாரிப்பாளர்கள் சம்பள உயர்வு அளிக்க மறுத்து விட்டனர்.

Strike in Malayalam film industry continues

இருதரப்பினருக்கும் நடந்த சமரச பேச்சுகள் தோல்வியில் முடிந்ததால் வேலை நிறுத்தம் நேற்று 8-வது நாளாக நீடித்தது. தடையை மீறி துல்கர் சல்மானை வைத்து ராஜீவ் ரவி இயக்கிய படத்தின் படப்பிடிப்புக்குள் புகுந்து தயாரிப்பாளர்கள் நிறுத்தினர்.

வேலை நிறுத்தம் தொடர்வதை தொடர்ந்து மலையாள நடிகர்-நடிகைகள் தமிழ், மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு சென்னை வருகிறார்கள்.

மம்முட்டி தமிழ் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். நடிகை பார்வதி மேனன் ‘பெங்களூர் நாட்கள்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

நிவின் பாலி நடித்த பிரேமம் மலையாள படம் சென்னையில் 200 நாட்களை தாண்டி ஓடுவதால் அவரும் தமிழ் படத்தில் நடிக்க கதை கேட்கிறார்.

இந்த வாரத்திலாவது ஸ்ட்ரைக்கை முடித்து வைக்க முயன்று வருகின்றனர். இல்லாவிட்டால் சங்கத்தை உடைக்கவும் முயற்சி நடக்கிறதாம்.

English summary
Due to continues strike in Malayalam film industry, most of the artists eagerly seeking chances in other language films like Tamil.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil