»   »  ஸ்ட்ரைக் தொடரும்.. தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு!

ஸ்ட்ரைக் தொடரும்.. தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
தொடரும் ஸ்ட்ரைக்.. இனி நோ ரிலீஸ்- வீடியோ

சென்னை : தியேட்டர்களில் படத்தை திரையிடும் QUBE கட்டண உயர்வை எதிர்த்து தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் கடந்த 1-ம் தேதி முதல் புதிய படங்களை திரையிட மாட்டோம் என்று அறிவித்தது.

இதனால் கடந்த வெள்ளிக்கிழமை வெளிவரவேண்டிய படங்கள் எதுவும் வெளிவரவில்லை. இதனால், தியேட்டர்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.

இந்த வாரம் படங்கள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்த நிலையில், போராட்டம் தொடரும் எனவும், அதுவரை படம் ரிலீஸ் ஆகாது எனவும் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை

தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை

தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த ஒரு மாத காலமாக நமது திரைத்துறையின் நலன் கருதி தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னட தயாரிப்பாளர்கள் சங்கம் இணைந்து டிஜிட்டல் சர்வீஸ் புரொவைடருக்கு எதிராக மார்ச் 1 முதல் புதிய திரைப்படங்கள் வெளியிடுவதில்லை என்று முடிவு எடுத்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

கோரிக்கை மறுப்பு

கோரிக்கை மறுப்பு

இந்நிலையில் 5.3.2018 அன்று ஐதராபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்கெனவே கூட்டு நடவடிக்கை குழு சார்பில் டிஜிட்டல் சர்வீஸ் வழங்குவோருக்கு வைத்த கோரிக்கைகளை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டார்கள்.

போராட்டம் தொடரும்

போராட்டம் தொடரும்

நாம் எதிர்பார்த்த அளவில் சுமூக உடன்படிக்கை ஏற்படாத காரணத்தினாலும், திரையரங்கு உரிமையாளர்கள் நமது தயாரிப்பாளர்களுக்கு இந்தப் பிரச்சினையில் எந்த வித ஒத்துழைப்பும் அளிப்பதில்லை என்ற முடிவினை எடுத்ததாலும், நமது நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் வரை புதிய படங்கள் வெளியிடுவதில்லை என்ற முடிவு தொடரும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்." எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த வாரமும் ரிலீஸ் இல்லை

இந்த வாரமும் ரிலீஸ் இல்லை

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு ஏற்பட்டு வருகிற வெள்ளிக்கிழமை படங்கள் வெளிவரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில் போராட்டம் தொடர்வதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary
The Producers council has announced that they will not be screening new films from the March 1, as opposed to QUBE rate hikes in the theaters. Now, producer council said that the strike will continues.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil