»   »  நகைக்கடை திறப்பு விழாவில் தமன்னா மீது ஷூ வீசிய பி.டெக். மாணவர்: காரணம்...

நகைக்கடை திறப்பு விழாவில் தமன்னா மீது ஷூ வீசிய பி.டெக். மாணவர்: காரணம்...

Posted By:
Subscribe to Oneindia Tamil
நகை கடை திறப்பு விழாவிற்கு வந்த தமன்னா மீது ஷூ வீசிய மாணவர்

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நகைக்கடை திறப்பு விழாவில் தமன்னா மீது பி.டெக். மாணவர் ஷூ வீசியுள்ளார்.

ஹைதராபாத்தில் உள்ள ஹிமாயத்நகரில் பிரபல நகைக்கடையின் புதிய கிளை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அந்த நகைக்கடையின் பிராண்ட் அம்பாசிடராக உள்ளார் நடிகை தமன்னா.

இந்நிலையில் அவர் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

கூட்டம்

கூட்டம்

தமன்னா நகைக்கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தமன்னாவை காண அங்கு ஏராளமான ரசிகர்கள் கூடிவிட்டனர். கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

காலணி

காலணி

கடையை திறந்து வைத்துவிட்டு அங்கு நின்றிருந்த தமன்னா மீது ரசிகர் ஒருவர் தனது ஷூவை தூக்கி வீசினார். இதை பார்த்த தமன்னாவின் பாதுகாவலர்கள் பாய்ந்து வந்து அந்த ரசிகரை தாக்கினார்கள்.

தாக்குதல்

தாக்குதல்

பாதுகாவலர்கள் தாக்குவதை பார்த்த போலீசார் ஓடி வந்து அந்த ரசிகரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

ஏமாற்றம்

விசாரணையில் தமன்னா மீது ஷூ வீசிய நபரின் பெயர் கரிமுல்லா என்றும், அவர் பி.டெக். மாணவர் என்றும் தெரிய வந்தது. விசாரணையில் அவர் கூறியதாவது, நான் தம்முவின் தீவிர ரசிகன். அவர் தற்போது தெலுங்கு படங்களில் நடிக்காததால் கோபத்தில் அவர் மீது ஷூ வீசினேன் என்றார்.

English summary
A B.Tech. student named Karimullah hurled his shoe at actress Tamanna when she came to open a jewellery shop in Himayathnagar in Hyderabad on sunday. Karimullah got angry that Tamanna is not acting in telugu movie now-a-days.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil