ஹாரர் காமெடி.. நாளை ரிலீஸ் ஆவதாக இருந்த காட்டேரி ரிலீஸ் தள்ளி வைப்பு.. ஸ்டூடியோ கிரீன் அறிவிப்பு!

By

சென்னை: நாளை ரிலீஸ் ஆவதாக இருந்த காட்டேரி படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வைபவ், ஆத்மிகா பொன்னம்பலம், கருணாகரன், சோனம் பாஜ்வா உட்பட பலர் நடித்துள்ள படம், காட்டேரி.

வரலட்சுமி சரத்குமார் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். யாமிருக்கே பயமே, கவலை வேண்டாம் ஆகிய படங்களை இயக்கிய டிகே இயக்கியுள்ளார்.

லாக்டவுன் காரணமாக

லாக்டவுன் காரணமாக

இதை தனது ஸ்டூடியோ ஸ்கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். ஹாரர் காமெடி படமான இந்தப் படம் முடிந்து ரிலீசுக்கு ரெடியான நேரத்தில் கொரோனா பரவல் அதிகமானது. இதனால் பிறப்பிக்கப்பட்ட லாக்டவுன் காரணமாக பல படங்களின் ரிலீஸ் பாதிக்கப்பட்டன.

தியேட்டர் ரிலீஸ்

தியேட்டர் ரிலீஸ்

அதில் இந்தப் படத்தின் ரிலீஸும் ஒன்று. இதனால், ஓடிடி தளத்தில் வெளியாகும் என கூறப்பட்டது. இதற்காக சில ஓடிடி தளங்களில் பேசி வந்தனர். இந்நிலையில் இந்தப் படம் தியேட்டரில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் அன்று அதாவது நாளை தியேட்டரில் வெளியாக இருப்பதாக ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் அறிவித்து இருந்தது.

தள்ளி வைப்பு

தள்ளி வைப்பு

இந்நிலையில், இதன் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி ஸ்டூடியோ கிரீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவி வருவதால் அனைவரின் நலனை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

சரியான முறையில்

சரியான முறையில்

அதனாலும் படத்தில் பணியாற்றியவர்களின் கடின உழைப்பு மக்களிடம் சரியான முறையில் சென்றடைய வேண்டும் என்ற நோக்கிலும் டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகவிருந்த காட்டேரி படத்தின் வெளியீட்டை தற்காலிகமாக தள்ளி வைக்கிறோம்' என ஸ்டுடியோ கிரீன் அறிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X