அஜித், விஜய் பற்றி கனல் கண்ணன் வெளியிட்ட சீக்ரெட்...அதிர்ந்து போன ரசிகர்கள்

சென்னை : ஸ்டன்ட் மாஸ்டர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர் என பலற்றிலும் சிறந்தவராக இருப்பவர் கனல் கண்ணன். 1990 களில் துவங்கி ஏராளமான படங்களுக்கு சண்டை பயிற்சி அளித்துள்ளார்.

பெரும்பாலான இந்திய மொழி படங்களுக்கு ஸ்டன்ட் அமைத்துள்ளார். ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட டாப் ஹீரோக்கள் பலருடனும் பணியாற்றி உள்ள கனல் கண்ணன், கமலின் அவ்வை சண்முகி, ரஜினியின் படையப்பா, சிவாஜி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்த கனல் கண்ணன்

சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்த கனல் கண்ணன்

தனது திரையுலக அனுபவம் பற்றி சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அதில் விஜய், அஜித் உடன் பணியாற்றும் போது செட்டில் நடந்த சில சுவாரஸ்யமான, வேடிக்கையான நிகழ்வுகளை பற்றியும் பகிர்ந்து கொண்டார்.

அதிர்ந்து போன ரசிகர்கள்

அதிர்ந்து போன ரசிகர்கள்

இந்த பேட்டியில் கனல் கண்ணன், விஜய் மற்றும் அஜித் பற்றி கூறிய சில தகவல்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது. அஜித் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், அஜித்திற்கு முதுகு தண்டுவடத்தில் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது.

அஜித்துக்கு எலும்பே இல்லை

அஜித்துக்கு எலும்பே இல்லை

முதுகில் ஒரு எலும்பே இல்லை அவருக்கு. மக்கள் நினைப்பது போது ஹீரோ ஆவது அவ்வளவு சுலபம் இல்லை. அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் இருந்தால் ஹீரோ ஆகி விடலாம் என பலர் நினைக்கிறார்கள் என்றார்.

விஜய் தலையில் ரத்தம் கொட்டியது

விஜய் தலையில் ரத்தம் கொட்டியது

விஜய் பற்றி கூறுகையில், சூட்டிங்கின் போது கண்ணாடி உடைக்கும் காட்சியில் விஜய்க்கு தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது என்றார். கனல் கண்ணன் தற்போது விக்ரம் நடிக்கும் கோப்ரா உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X