Madharaasi: லாரி மோதி 8 கார் பறந்த டோல்கேட் காட்சி.. ஸ்டண்ட் மாஸ்டர் கெவின் என்னங்க இப்படி கத்தறாரு?
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி நேற்று அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் மதராஸி. படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுளார். அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் ருக்மினி வசந்த், பிஜு மேனன், வித்யூ ஜமால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக சண்டைக் காட்சிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
மதராஸி படம் காதல் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக உருவாகி உள்ளது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் காட்சிக்கு காட்சி ஆதரவு பெருகி வருகிறது. படம் எப்படியும் முதல் மூன்று நாட்களில் ரூபாய் 100 கோடிகளை வசூலித்து விடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தில் இடம்பெற்ற ஒரு ஸ்டண்ட் காட்சியை மிகவும் அட்டகாசமாக படமாக்கி உள்ளார் ஸ்டண்ட் மாஸ்டர் கெவின். டோல்கேட் காட்சி ஒன்றில் சுமார் ஏழு, எட்டு கார்களை ஒரு லாரி மோதித் தள்ளி விட்டுச் செல்லும் காட்சி உள்ளது.

இந்த காட்சியைப் பார்த்த பின்னர் தான், எ.ஆர். முருகதாஸ் மதராஸி மட்டும் இல்லாமல் சிக்கந்தர் படத்திலும் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றச் சொல்லி உள்ளார். அதாவது, டோல்கேட் காட்சி எடுத்து முடித்த பின்னர் ஏ.ஆர். முருகதாஸ் சாருக்கு என் மீது மிகவும் நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. அதன் பின்னர் அவர் என்னை அவரது அலுவலகத்துக்கு அழைத்து சிக்கந்தர் படத்திற்கும் ஸ்டண்ட் செய்யச் சொன்னதும் எனக்கு உச்சகட்ட சந்தோஷம் ஏற்பட்டுவிட்டது. ஜெயிலர் படத்தில் நான் ஸ்டண்ட் காட்சிகள் இயக்கியதைக் கேள்விப்பட்டு தான் அவர் என்னை மதராஸிக்கு அழைத்தார் என்று விகடனுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
ஸ்ட்ண்ட் மாஸ்டர்: இப்படி இருக்கும்போது அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்த டோல்கேட் ஸ்டண்ட் காட்சியை ஒரே ஷாட்டில் எடுத்துள்ளார் கெவின். அதாவது, அந்த காட்சியை ஒரே ஷாட்டில் எடுத்து முடித்ததும் ஸ்டண்ட் மாஸ்டரும் அவரது டீமும் துள்ளிக் குதிக்கும் காட்சி எக்ஸ் பக்கத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த காட்சியை கிட்டத்தட்ட 12 முதல் 13 கேமராக்கள் கொண்டு படமாக்கப்பட்டது. அந்த காட்சி எடுத்து முடிந்ததும் மொத்த ஸ்டண்ட் குழுவும் உற்சாக வெள்ளத்தில் துள்ளிக் குதித்தார்கள். இது தொடர்பான காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
வசூல் நிலவரம்: படம் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் சுமார் ரூபாய் 13 கோடிகளில் இருந்து ரூபாய் 15 கோடிகள் வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. இரண்டாவது நாளில் முதல் நாளை விடவும் அதிகப்படியான வசூல் இருக்கும் என்று படக்குழு எதிர்பார்த்துக் கொண்டு உள்ளது. இந்த படத்தின் மூலம் ஏ.ஆர். முருகதாஸ் கம்பேக் கொடுத்துவிட்டார் என்று பலரும் பேசி வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications











