»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை அசோக் நகரில் சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் தேஜா தாக்கப்பட்டார்.

"வாலி" உள்ளிட்ட சில படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்தவர் தேஜா. இவர் சென்னை அசோக் நகரில்தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்புறத்தில் மாம்பலத்தைச் சேர்ந்த வாசுதேவன்என்பவர் காரில் வந்து கொண்டிருந்தார்.

இருவரும் எதிரும்புதிருமாக வந்ததால் மோதும் நிலை ஏற்பட்டது. இருப்பினும் இருவரும் பிரேக் போட்டுவிட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது. வண்டிகளை பிரேக் போட்ட இருவரும் வாய்த்தகராறில் ஈடுபட்டனர். இதுகைகலப்பில் போய் முடிந்தது.

இந்த மோதலில் தேஜாவின் மூக்குக் கண்ணாடி உடைந்து முகத்தில் ரத்தம் வழிந்தது. அதிக ரத்தம் வெளியேறிவிட்டதால் அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil