Su From So: ரூ.6 கோடி பட்ஜெட்.. ரூ.100 கோடி வசூல்.. தமிழில் ரீமேக் ஆகும் சு ஃப்ரம் சோ கன்னடப் படம்!

சென்னை: கன்னட திரையுலகம் பெரும் பின்னடைவை சந்தித்து கொண்டிருந்த காலகட்டத்தில், 'சு ஃப்ரம் சோ' திரைப்படம் எந்த எதிர்பார்ப்புமின்றி வெளியாகி, பாக்ஸ் ஆபிஸ் வசூலில் புதிய சாதனையை படைத்துள்ளது. நட்சத்திர அந்தஸ்து மிக்க நடிகர்களோ, பிரபல இயக்குநரோ, தொழில்நுட்பக் கலைஞர்களோ இல்லாத போதிலும், இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனை நிகழ்த்தியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை தமிழில் ரீ மேக் செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உண்மையைச் சொல்லப்போனால், கே.ஜி.எஃப் 2 படத்திற்கு பின்னர் கன்னட திரையுலகில் மிகப்பெரிய வெற்றி என்பதே இல்லை எனக் கூறலாம். அதுவும் குறிப்பாக கடந்த இரு ஆண்டுகளாக கன்னடத் திரைப்படத் துறை தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த நிலையில், கன்னட திரையுலகமே பெரிய வெற்றிக்காக ஆவலுடன் காத்திருந்தது. அந்த வெற்றியை இளம் திறமையாளர்களால் உருவான 'சு ஃப்ரம் சோ' மூலம் சாத்தியமாகி உள்ளது.

ராஜ் பி ஷெட்டி தயாரித்து, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இப்படத்தின் ரிலீஸ்க்கு முன்னர், அதை அவர் வெளிப்படுத்தவில்லை. படத்தின் கதை மீது மட்டுமே நம்பிக்கை வைத்து படத்தை வெளியிட்டனர். திரைப்படம் வெளியானதும் ரசிகர்களிடமிருந்து கிடைத்த வரவேற்பை கண்டு படக்குழுவே ஆச்சரியப்பட்டது எனக் கூறலாம். கடந்த ஆண்டு தமிழ் சினிமாவுக்கு எப்படி லப்பர் பந்து என்ற படம் கிடைத்ததோ அதேபோன்று கன்னட திரையுலகத்திற்கு இந்த சு ஃப்ரம் சோ.

Su From So Kannada Movie Will Remake Tamil It Reaction Of Its Box Office Hit
Photo Credit:

கன்னடத் திரையுலகில் புதிய வரலாற்றைப் படைத்த 'சு ஃப்ரம் சோ' திரைப்படம் தற்போது 25 நாட்களை வெற்றிகரமாகக் கடந்துள்ளது. கடந்த 25 நாட்களாக பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து முன்னேறி வருகிறது. முதல் மூன்று வாரங்களில் இப்படம் அபார வசூலைக் குவித்துள்ளது. குறிப்பாக வார நாட்களை விட வார இறுதி நாட்களில் 'சு ஃப்ரம் சோ' படத்தின் வசூலைக் கண்டு திரையுலகமே வியந்து போனது.

லோ பட்ஜெட்: நேற்று முன் தினம் அதாவது, ஆகஸ்ட் 18 அன்று, 'சு ஃப்ரம் சோ' வெளியாகி 25 நாட்களை நிறைவு செய்தது. சமீபகாலமாக, கன்னடத் திரைப்படங்கள் 25 நாட்களைக் கடப்பதே பெரிய விஷயமாகக் கருதப்பட்டது. ஆனால், 'சு ஃப்ரம் சோ' அதன் 25-வது நாளிலும் கூட சிறப்பான வசூலை ஈட்டியுள்ளது என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது படம் தனது 25 வது நாளில் ரூபாய் 100 கோடிகளை விட அதிகம் வசூலித்துள்ளது எனக் கூறப்படுகிறது. இந்த படம் ரூபாய் 6 கோடிகள் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

100 கோடிகள் வசூல்: 'சு ஃப்ரம் சோ' படத்தின் கன்னடத்தில் மற்றும் மற்ற மொழிகளை காட்டிலும் கூடுதலாக வசூல் குவித்துள்ளது. கன்னட ஊடகங்களின் தகவலின்படி, கன்னடத்தில் மட்டும் சுமார் ரூபாய் 72.27 கோடி வசூலாகியுள்ளது. மலையாளத்தில் படம் ரூபாய் 5.27 கோடியும், தெலுங்கில் படம் ரூபாய் 1.28 கோடியும் வசூலித்துள்ளன. இது மட்டும் இல்லாமல் படத்திற்கு வெளிநாட்டு வசூலும் கை கொடுத்ததால் மொத்தம் ரூபாய் 100 கோடிகளை படம் எட்டியுள்ளது.

தமிழ் ரீமேக்: இந்நிலையில் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது சு ஃப்ரம் சோ படத்தை பிரபல விநியோகஸ்தர் என்.எஸ் ராஜ்குமார் என்பவர் அதன் தமிழ் ரீமேக் உரிமையை பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டாலும் தமிழ் ரசிகர்கள் படத்தை கொண்டாடுவார்கள் என்பதால், தமிழிலும் படத்திற்கு பெரிய ஹிட் காத்துக் கொண்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X