twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பது நல்லது: சுப வீரபாண்டியன்

    ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பது நல்லது என சுப வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

    |

    சென்னை: ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல் அவருக்கும் நல்லது என சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

    ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற கேள்வி மறைந்து ஒரு நேரத்தில் அவர் அரசியலுக்கு வருவதெல்லாம் மா மரத்தில் மாதுளை பழுப்பதற்கு சமம் என விமர்சனங்கள் எழுந்தன.

    Suba Veerapandiyan about Rajini politics!

    கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி கூட்டத்தை கூட்டி, அரசியலுக்கு நிச்சயம் வருகிறேன். அடுத்த சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறோம் என தடாலடியாக அறிவித்து ஒட்டுமொத்த ஊடகங்களையும் தன் பக்கம் திருப்பினார் ரஜினி.

    திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்த மண்ணில் ஆன்மீக அரசியல் செய்யப் போகிறேன் என சொன்னதும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆன்மீக அரசியல் என்றால் ஒழுக்கமான நேர்மையான அரசியல் என விளக்கமளித்தும் அந்த சலசலப்பு இன்னும் நீடிக்கிறது. அதே நேரத்தில் ரஜினியின் அரசியல் அறிவிப்பை பலரும் வரவேற்றனர்.

    அரசியலுக்கு வருவேன் என அறிவித்து எட்டு மாதங்கள் ஓடிவிட்ட நிலையில் இன்னும் கட்சியை அறிவிக்காமல் காலம் தாழ்த்துவது ரசிகர்கள் மட்டுமல்லாமல் அரசியல்வாதிகளுக்குமே போரடிக்கிறது. இந்த நிலையில், போராட்டம் மற்றும் எட்டுவழிச்சாலை குறித்த அவரின் பார்வையால், ரஜினி பாஜகவுடன் கூட்டணி வைப்பார் என யூகிக்கிறார்கள். அவர் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

    இந்த நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு பேட்டியளித்த திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன் ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பதுதான் தமிழ்நாட்டுக்கும் அவருக்கும் நல்லது. இது குறித்த ரஜினியின் பதிலுக்காக காத்திருக்கிறோம் எனக் கூறியுள்ளார்.

    English summary
    Suba Veerapandian said that it will good for Rajini and Tamil Nadu if he stays away from politics.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X