»   »  மறக்க முடியாத சத்ரியன்.. மனதில் பதிந்த "பன்னீர் செல்வம்"... சபாஷ் சுபாஷ்!

மறக்க முடியாத சத்ரியன்.. மனதில் பதிந்த "பன்னீர் செல்வம்"... சபாஷ் சுபாஷ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜயகாந்த் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் அவரை சத்ரியனாக நமது மனதில் பதிய வைத்தவர் இயக்குனர் சுபாஷ்.

உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல இயக்குனர் சுபாஷ் இன்று உயிர் இழந்தார். அவருக்கு வயது 57.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் எத்தனையோ படங்களில் காக்கிச் சட்டை போட்டாலும் அவர் சத்ரியன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

பன்னீர் செல்வம்...!

சுபாஷ் இயக்கிய சத்ரியன் படத்தில் பன்னீர் செல்வம் என்ற பெயரில் போலீஸ் அதிகாரியாக வந்து அதகளம் செய்திருப்பார் விஜயகாந்த்.

பழைய பன்னீர் செல்வமா நீ வருவ

வில்லன் வந்து விஜயகாந்திடம் உனக்கு என் மீது கோபம் வரலை, என்னை பிடித்து உள்ளே போடணும்னு தோணலை, தோணும், கொஞ்சம் கொஞ்சமாக தோணும். நீ பழைய பன்னீர் செல்வமா வருவ என்று கூறிய வசனம் அப்போது மிகவும் பிரபலம்.

நீ வரணும்.. திரும்ப வரணும்

காவல் துறையே வேண்டாம் என்று ஒதுங்கியிருக்கும் விஜயகாந்தை பார்த்து நீ வரணும்.. நீ திரும்ப வரணும், எனக்கு நீ வேணும், ஏசி பன்னீர் செல்வமா வேணும் என்பார் வில்லன் அருமைநாயகம்.

நீ பழைய செல்வம் இல்லை

மீண்டும் காவல் துறையில் சேர வரும் விஜயகாந்தை பார்த்து நீ பழைய செல்வம் இல்லை என்பார் விஜயகுமார்.

கிளைமாக்ஸ்

சத்ரியன் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி.. மறக்க முடியாத வசனங்கள்.. மறக்க முடியாத விஜயகாந்த் நடிப்பு

மறக்க முடியாத இசையும்

சத்ரியன் படத்தில் விஜயகாந்தின் நடிப்பு மட்டும் அல்ல இசையும் அருமை என்றே கூற வேண்டும்.

English summary
Director Subash who gave us Panneer Selvam in his blockbuster movie Sathriyan is no more.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil