»   »  டி 16 பட இயக்குனரை பிளாக் செய்த சு. சாமி: அதுக்குள்ள பயந்தா எப்படி என நரேன் கிண்டல்

டி 16 பட இயக்குனரை பிளாக் செய்த சு. சாமி: அதுக்குள்ள பயந்தா எப்படி என நரேன் கிண்டல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தன்னை இந்தியன் டிரம்ப் என விமர்சித்து ட்வீட்டிய துருவங்கள் 16 பட இயக்குனர் கார்த்திக் நரேனை ட்விட்டரில் பிளாக்(block) செய்துள்ளார் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி.

பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி உலக நாயகன் கமல் ஹாஸனை முதுகெலும்பில்லாத சுயதம்பட்ட முட்டாள் என ட்விட்டரில் விமர்சித்திருந்தார். இதை பார்த்த கமல் ரசிகர்கள் கொந்தளித்து சு. சாமியை திட்டி வருகிறார்கள்.

சாமியின் ட்வீட்டை பார்த்த துருவங்கள் 16 பட இயக்குனர் கார்த்திக் நரேன் அவருக்கு பதில் அளித்து ட்வீட்டினார்.

ஹலோ

சாமி தயவு செய்து பாம்பஸ் போன்ற கடினமான வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தாதீர்கள். ஏனென்றால் கமல் சாரின் ஒரு ஹலோவை புரிந்துகொள்ள உங்களுக்கு பல ஆண்டுகள் ஆகும். இந்தியன் டிரம்ப்! என நரேன் சாமிக்கு பதில் அளித்து ட்வீட்டினார்.

சு.சாமி

சு.சாமி

தன்னை இந்தியன் டிரம்ப் என விமர்சித்த கார்த்திக் நரேனை சுப்பிரமணியன் சாமி ட்விட்டரில் பிளாக் செய்துள்ளார். நரேனால் சாமியின் ட்வீட்டுகளை இனி பார்க்க முடியாது.

நரேன்

சு. சாமி தன்னை ட்விட்டரில் பிளாக் செய்ததை நரேன் பிரிண்ட் ஸ்கிரீன் எடுத்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு கூறியிருப்பதாவது, என்ன சார் நீங்க! இப்போ தான டைட்டில் கார்டே போட்டா அதுக்குள்ள பயந்தா எப்படி? என தெரிவித்துள்ளார்.

மீண்டும்

கமல் ஹாஸன் ஒரு சுயதம்பட்ட முட்டாள் என்று மீண்டும் ட்வீட்டிய சாமி கூறியிருப்பதாவது, நான் அனைத்து தமிழர்களையும் பொர்க்கிகள் என்று கூறியதாகவும், அவர் அரசியலுக்கு வருவதை தடுத்ததாகவும் பொய் சொல்லியுள்ளார் என்கிறார்.

English summary
BJP leader Subramanian Swamy has blocked Dhuruvangal 16 director Karthick Naren who called him Indian Trump.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil