»   »  வட சென்னை படத்தில் முக்கிய வில்லனாக சுப்ரமணிய சிவா

வட சென்னை படத்தில் முக்கிய வில்லனாக சுப்ரமணிய சிவா

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் தனுஷை வைத்து திருடா திருடி என்ற பிளாக்பஸ்டர் படத்தைக் கொடுத்தவர் இயக்குநர் சுப்ரமணிய சிவா. அதன் பின் பொறி, சீடன், யோகி படங்களை இயக்கினார். தனுஷ் உடன் இருந்து அவர் நடிக்கும், இயக்கும் படங்களுக்கு உதவி செய்து வருகிறார்.

தனுஷ் தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வட சென்னை படத்தில் நடித்து வருகிறார். ஸ்ட்ரைக் காரணமாக வட சென்னை படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிற்கின்றன.

Subramaniya Siva plays key role in Vada Chennai

இப்போது வட சென்னை படத்தில் சுப்ரமணிய சிவா முக்கிய ரோலில் நடிக்கிறார். படத்தில் இடம்பெற்றுள்ள வில்லன்களுக்கு எல்லாம் குருவாக நடிக்கிறாராம். சிறையில் இருந்தபடியே வில்லன்களை இயக்கும் ரோல் அது. இந்த தோற்றத்துக்காக ஸ்பெஷலாக தாடி வளர்த்து திரிந்தவர் படப்பிடிப்பு முடிந்ததும் அதை எடுத்துவிட்டார்.

சுப்ரமணிய சிவா அடுத்து வெள்ளை யானை என்ற படத்தை சமுத்திரகனியை கதாநாயகனாக வைத்து இயக்கி வருகிறார். விவசாயத்தை அடிப்படையாக கொண்ட கதை இது.

English summary
Director Subramaniya Siva is playing an important role in Dhanush's Vada Chennai movie

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X