twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சுப்ரமணியபுரம் என்னுடைய கதை... திடீரென சர்ச்சையை கிளப்பும் அமீர்!

    |

    சென்னை : சிறந்த இயக்குனராக தமிழ் சினிமாவில் உள்ள அமீர் இப்பொழுது நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறார்

    தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மாறன் படத்தில் மிக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றார்

    இந்த நிலையில் சுப்ரமணியபுரம் என்னுடைய கதை என அமீர் பேசியுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிறது.

    நம்பர் நடிகை மீது கோபத்தில் இருக்கும் மூன்றெழுத்து நடிகை… இதுதான் காரணம் !நம்பர் நடிகை மீது கோபத்தில் இருக்கும் மூன்றெழுத்து நடிகை… இதுதான் காரணம் !

    சந்தனத்தேவன்

    சந்தனத்தேவன்

    சூர்யாவின் திரை வாழ்க்கையில் மிகவும் வித்தியாசமான படமாக வெளிவந்த மௌனம் பேசியதே மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குநர் அமீர். அதைத் தொடர்ந்து ராம் என்ற அட்டகாசமான படத்தை இயக்கி சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்தார். நடிகர் கார்த்தி ஹீரோவாக அறிமுகமான பருத்திவீரன் என்ற படத்தை இயக்கியதன் மூலம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்த அமீர் கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஆதிபகவான் என்ற படத்தை இயக்கினார். அதன்பிறகு படங்களை இயக்காமல் இருந்த அமீர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆர்யா நடிப்பில் உருவாகிவரும் சந்தனத்தேவன் படத்தை இயக்கி வருகிறார். இப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது ஆனால் அதன்பிறகு எந்த ஒரு அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை

    வட சென்னையில் ராஜன்

    வட சென்னையில் ராஜன்

    சிறந்த இயக்குனராக தமிழ் சினிமாவில் வலம் வந்த அமீர் திடீரென நடிகராக அவதாரம் எடுத்து படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் தோன்றி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் அந்த வகையில் வெற்றிமாறனின் வட சென்னையில் ராஜன் என்ற கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்த அமீர் நடிகராகவும் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்துள்ளார்

    அரசியல் பேசும் அரசியல்வாதியாக

    அரசியல் பேசும் அரசியல்வாதியாக

    வட சென்னையை தொடர்ந்து அமீர் அடுத்தடுத்து நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடித்து வருகிறார். தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மாறன் படத்தில் மிகவும் வித்தியாசமான ரோலில் அமீர் நடித்து பாராட்டுக்களைப் பெற்று இருப்பார். ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் வி இசட் துரை இயக்கத்தில் நாற்காலி என்ற படத்தில் முழுக்க முழுக்க அரசியல் பேசும் அரசியல்வாதியாக நடித்துள்ளார்

    இறைவன் மிகப்பெரியவன்

    இறைவன் மிகப்பெரியவன்

    நீண்ட இடைவெளிக்கு பிறகு வெற்றிமாறன் கதையில் அமீர் இயக்கி நடிக்கும் இறைவன் மிகப்பெரியவன் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் சுப்ரமணியபுரம் என்னுடைய கதை என அமீர் சர்ச்சையாக பேசியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

    சுப்ரமணியபுரம் என்னுடைய கதை

    சுப்ரமணியபுரம் என்னுடைய கதை

    கடந்த 2008 ஆம் ஆண்டு சசிகுமார் இயக்கத்தில் ஜெய், சமுத்திரக்கனி, ஸ்வாதி, கஞ்சா கருப்பு என பலர் நடிப்பில் வெளியான சுப்பிரமணியபுரம் முழுக்க முழுக்க மதுரை பின்னணியில் எடுக்கப்பட்டது. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. காலங்கள் கடந்தும் தமிழ் சினிமாவில் ஆகச் சிறந்த படைப்பாக உள்ள சுப்ரமணியபுரம் என்னுடைய கதை, ஒருவேளை ஒரே மாதிரியான சிந்தனையில் சசிகுமாரும் இதே கதையை சந்தித்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.

    English summary
    Subramaniyapuram Movie is my script Claims Director ameer
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X