»   »  சங்கிலி புங்கிலி கதவ தொற... அட, அதுக்குள்ள வெற்றி விழாவா!

சங்கிலி புங்கிலி கதவ தொற... அட, அதுக்குள்ள வெற்றி விழாவா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தின் வெற்றி விழாவை இன்று சென்னையில் கொண்டாடியது படக்குழு.

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், இயக்குநர் அட்லீயுடன் இணைந்து தயாரித்த படம் இது.


வெளியான வார இறுதி நாட்களில் நல்ல ஓபனிங்கை கொடுத்துள்ள சங்கிலி புங்கிலி கதவ தொற படம் வார நாட்களிலும் நன்றாகவே போய்க் கொண்டிருப்பதாக படக்குழு தெரிவித்தது.


Success celebration of Sangili Bungili Kathava Thorea

ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி, ராதாரவி, ராதிகா, தம்பி ராமையா என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் உண்டு.


Success celebration of Sangili Bungili Kathava Thorea

படத்தின் வெற்றி குறித்து ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் சிஇஓ விஜய் சிங் கூறும்போது, "இதற்கு முன் எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, காக்கா முட்டை என பல அறிமுக இயக்குநர்களின் திறமையை மட்டுமே நம்பி, அறிமுகப்படுத்தி வெற்றி கண்டுள்ளது ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ். அந்த வரிசையில் சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தின் மூலம் ஐக் என்ற திறமையான ஒரு இயக்குனரை கண்டுபிடித்து தமிழ் திரையுலகிறகு கொடுத்திருக்கிறோம். மீடியம் பட்ஜெட்டில் உருவான இந்த படம் முதல் மூன்று நாட்களிலேயே நல்ல வசூலைக் கொடுத்திருக்கிறது.


Success celebration of Sangili Bungili Kathava Thorea

'சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்தின் வெற்றி எங்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. நல்ல புதுமையான கதைகளை தேர்ந்தெடுத்து, சிறப்பான மார்க்கெட்டிங் மற்றும் டிஸ்ட்ரிபியூஷன் மூலம் ரசிகர்களை மகிழ்விப்பதே எங்கள் நோக்கம். இந்த படத்தில் மூலம் ஐக் மற்றும் அட்லீயுடன் இணைந்தது மகிழ்ச்சி," என்றார்.

English summary
Success celebration of Sangili Bungili Kathava Thorea The crew of Sangili Bungili Kathava Thorea has celebrated the success of the movie today in Chennai.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil