»   »  ருத்ரமாதேவி வெற்றிக்கு அல்லு அர்ஜுன் காரணமா?... அதிர்ச்சியில் தெலுங்குப் படவுலகம்

ருத்ரமாதேவி வெற்றிக்கு அல்லு அர்ஜுன் காரணமா?... அதிர்ச்சியில் தெலுங்குப் படவுலகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ருத்ரமாதேவி படத்தின் வெற்றிக்கு நான், தான் காரணம் என்று தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் கூறியதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பாடல் ருத்ரமாதேவி. அனுஷ்கா, அல்லு அர்ஜுன், ராணா, பிரகாஷ் ராஜ், கேத்தரின் தெரசா மற்றும் நித்யாமேனன் ஆகியோர் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்திருந்தனர்.


Success of Rudramadevi Reason for Allu Arjun?

குணசேகர் இயக்கியிருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருந்தார். சுமார் 80 கோடிகளில் எடுக்கப்பட்ட இப்படம் வெளிவந்த 3 வது வாரத்தில் போட்ட பணத்தினை வசூல் செய்தது.


இதுவரை 87 கோடிகளை உலகம் முழுவதும் வசூலித்திருக்கும் இப்படமானது விரைவில் 100 கோடியைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் படத்தில் கோனா கானா ரெட்டியாக நடித்திருந்த அல்லு அர்ஜுன் இந்தப் படத்தின் வெற்றிக்கு தான், தான் காரணம் என்று சொல்லியதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.


சமீபத்திய பேட்டிகளில் அல்லு அர்ஜுன் இந்தப் படத்தைப் பற்றி அவரே கூறுவதாகவும், பொருளாதாரப் பிரச்சினைகளில் சிக்கித் தவித்த இப்படத்தை தான் காப்பாற்றியதாகவும் கூறுகிறாராம்.


மேலும் பணத்திற்காக இந்தப் படத்தில் தான் நடிக்கவில்லை என்றும், குணசேகருக்கு உதவும் நோக்கில் தனது மனத்திருப்திக்காகவே இப்படத்தில் தான் நடித்துக் கொடுத்ததாகவும் கூறுகிறாராம்.


இதைக் கேள்விப்பட்ட தெலுங்குப் படவுலகினர் இந்தப் படத்திற்காக அனுஷ்கா மற்றும் குணசேகர் உழைத்தது பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் ஒரு சிறிய வேடத்தில் நடித்து விட்டு இவர் இப்படிக் கூறுவது நியாயமா? என்று வருத்தப்படுகிறார்களாம்.

English summary
Anushka's Rudramadevi a good business at the Domestic and Overseas box office. Sources Said Allu Arjun Recent Interviews He says I am Responsible for the Success of the Film Rudramadevi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil