»   »  பாங்கு சப்தம் காதை கிழிக்கிது: ட்வீட்டிய பாடகி சுசித்ராவை லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிய நெட்டிசன்கள்

பாங்கு சப்தம் காதை கிழிக்கிது: ட்வீட்டிய பாடகி சுசித்ராவை லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிய நெட்டிசன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாங்கு சப்தம் காதை கிழிக்கிறது என்று ட்வீட்டிய நடிகையும், பாடகியுமான சுசித்ரா கிருஷ்ணமூர்த்தியை நெட்டிசன்கள் திட்டித் தீர்த்துள்ளார்கள்.

பள்ளிவாசல்களில் பாங்கு சொல்லும் சப்தம் தூக்கத்திற்கு இடையூறாக இருப்பதாக பாலிவுட் பாடகர் சோனு நிகம் தெரிவித்திருந்தார். அவரை அடுத்து பாலிவுட் நடிகையும், பாடகியுமான சுசித்ரா கிருஷ்ணமூர்த்தியும் பாங்கை விமர்சித்துள்ளார்.

பாங்கு சப்தம் சுசித்ராவின் காதை கிழிக்கிறதாம்.

பாங்கு

காலை 4.45 மணிக்கு வீட்டிற்கு வந்தால் பாங்கு சப்தம் காதை கிழிக்கிறது. திணிக்கப்படும் மதவாதத்தை தவிர வேறு எதுவும் மோசமானதாக இருக்க முடியாது என்று ட்விட்டரில் தெரிவித்தார் சுசித்ரா.

 கிண்டல்

கிண்டல்

விடிய விடிய பார்ட்டியில் ஆட்டம்போட்டுவிட்டு அதிகாலை வீட்டிற்கு வந்தபோது இரண்டு நிமிட பாங்கு சப்தம் காதை கிழிக்கிறதோ என்று நெட்டிசன்கள் அவரை கலாய்த்தனர்.

 திட்டு

திட்டு

சில நெட்டிசன்கள் கோபப்பட்டு சுசித்ராவை அசிங்க அசிங்கமாக பேசினார்கள். கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியதை பார்த்த சுசித்ரா கோபம் அடைந்தார்.

 போலீஸ்

போலீஸ்

சமூக வலைதளங்களில் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சுசித்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

English summary
Actress cum singer Suchitra Krishnamoorthi has criticised azaan which irritated the tweeples.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil