»   »  தனுஷ் பற்றிய 'அந்த' ட்வீட்டை நீக்கிவிட்டு முக்கிய வேலை பார்த்த பாடகி சுசித்ரா

தனுஷ் பற்றிய 'அந்த' ட்வீட்டை நீக்கிவிட்டு முக்கிய வேலை பார்த்த பாடகி சுசித்ரா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நள்ளிரவில் எல்லை மீறிய விளையாட்டு விவகாரத்தை அடுத்து பாடகி சுசித்ரா ட்விட்டரில் முக்கிய வேலை ஒன்றை பார்த்துள்ளார்.

நள்ளிரவு பார்ட்டியில் பாடகி சுசித்ரா, தனுஷ், சிம்பு கலந்து கொண்டனர். அப்போது தனுஷின் ஆட்கள் தன்னை தாக்கியதில் தனது கையில் காயம் ஏற்பட்டதாக பாடகி சுசித்ரா ட்வீட்டியிருந்தார். சுசித்ராவின் ட்வீட்டால் பரபரப்பு ஏற்பட்டது.

காயம் அடைந்த தனது கையை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டார்.

ஹேக்

ஹேக்

சுசித்ரா போட்ட ட்வீட்டுகள் எல்லாம் தனிப்பட்ட பிரச்சனை தொடர்பானது என்று கூறிய அவர் கணவர் கார்த்திக் மறுநாளே அந்த கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டார்.

ட்விட்டர்

ட்விட்டர்

ட்விட்டர் கணக்கு மறுபடியும் தனது கைக்கே வந்துவிட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ட்வீட்டினார் சுசித்ரா. மேலும் தனுஷ் தன்னை தாக்கவில்லை என்றும் ஒரு அணியின் எல்லை மீறிய விளையாட்டால் காயம் ஏற்பட்டதாகவும் ட்விட்டரில் தெரிவித்தார். பின்னர் அந்த ட்வீட்டை நீக்கிவிட்டார்.

போதையா?

சுசித்ராவின் ட்வீட்டுகளை பார்த்த நெட்டிசன்கள் அவர் போதையில் இருப்பதாக கூறி வந்தனர். அப்போ முன்னாடி ட்வீட் போட்டப்போ போதையா... இல்ல இப்போ போதையா... ஏன் இந்த உளறல்?? என ட்வீட்டிய கவுதமை போன்று பலர் அவரிடமே ட்விட்டரில் கேட்கத் துவங்கினர்.

சுசித்ரா

சுசித்ரா

ஆளாளுக்கு தன்னிடம் போதையில் உளறுகிறீர்களா என்று கேட்டு வந்த நிலையில் சுசித்ரா தனது ட்வீட்டுகளை தனது ஃபாலோயர்கள் மட்டுமே பார்க்கும்படி செய்துவிட்டார்.

English summary
Singer Suchitra has deleted that rumour clarification tweet and is allowing only her followers to see her tweets.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil