»   »  சுசிலீக்ஸில் புது டுவிஸ்ட்: சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு மட்டும் அல்ல இமெயில்களும்...

சுசிலீக்ஸில் புது டுவிஸ்ட்: சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு மட்டும் அல்ல இமெயில்களும்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது ட்விட்டர் கணக்கை ஹேக் செய்து ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாடகி சுசித்ரா போலீசில் புகார் அளித்துள்ளார்.

பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் தனுஷ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தனது ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டதாக சுசித்ரா தெரிவித்தார். #suchileaks என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டானது. இந்நிலையில் சுசித்ரா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது,

சுசித்ரா

சுசித்ரா

மார்ச் மாதம் 2ம் தேதி யாரோ என் ட்விட்டர் கணக்கை(@suchitrakarthik) ஹேக் செய்து திரையுலக பிரபலங்களின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் கமெண்ட்டுகளை போட்டனர்.

மிரட்டல்

மிரட்டல்

திரையுலக பிரபலங்களின் மேலும் பல புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடப்போவதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டது. அப்போது எனக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்ததால் ட்விட்டர் இந்தியா தலைவரை அணுகி என் ட்விட்டர் கணக்கை என் கணவர் கார்த்திக் குமார் முடக்கினார்.

ட்விட்டர்

ட்விட்டர்

ட்விட்டரில் என் பெயரில் 40-50 போலி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளது. அவை அனைத்திலும் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இமெயில்

இமெயில்

ட்விட்டர் கணக்கு போக என்னுடைய இமெயில்களும் ஹேக் செய்யப்பட்டது. அவற்றில் இருந்து திரையுலக பிரபலம் ஒருவருக்கு அசிங்கமான இமெயில்கள் சென்றுள்ளன. இத்தனைக்கும் காரணமானவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று சுசித்ரா தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

English summary
Singer Suchitra has filed a police complaint against those who hacked her twitter account and e-mails too.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil