»   »  'பத்மாவதி'க்காக சுந்தர்.சியின் சங்கமித்ராவை கைவிட்ட பிரபலம்

'பத்மாவதி'க்காக சுந்தர்.சியின் சங்கமித்ராவை கைவிட்ட பிரபலம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சுந்தர் சி.யின் மெகா பட்ஜெட் படமான சங்கமித்ராவில் இருந்து ஒளிப்பதிவாளர் சுதீப் சாட்டர்ஜி வெளியேறியுள்ளார்.

ஆர்யா, ஜெயம் ரவியை வைத்து சுந்தர் சி இயக்கும் சங்கமித்ரா படம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படுகிறது. பெரிய பட்ஜெட் என்பதாலேயே இதில் நடிக்க விஜய் மற்றும் சூர்யா ஆகியோர் மறுத்தனர்.

Sudeep Chattarjee ditches Sangamithra for Padmavati

படத்தில் சங்கமித்ராவாக ஸ்ருதி ஹாஸன் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஒளிப்பதிவாளர் சுதீப் சாட்டர்ஜி டேட்ஸ் பிரச்சனையை கூறி படத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி வரும் பத்மாவதி படத்தில் சுதீப் தற்போது பணியாற்றி வருகிறார். அந்த படத்திற்கு கூடுதல் டேட்ஸ் தேவைப்படுவதால் அவர் சுந்தர் சி.யின் படத்தில் இருந்து வெளியேறியுள்ளார். இதை அவரே ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து வேறு ஒரு பிரபல ஒளிப்பதிவாளருடன் சுந்தர் சி. பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Cinematographer Sudeep Chatterjee tweeted that, 'Really sad to step out of #sangamithra ThenandalFilms owing to the extension of the Padmavati schedule! Love to the gorgeous team.....'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil