ட்விட்டரில் இணைந்த பிரபலம்...ஒரே நாளில் 39000 ஃபாலோயர்ஸ்

சென்னை : பிரபல நடிகர், நடிகைகளையே மிஞ்சும் அளவிற்கு சினிமா பிரபலம் ஒருவர் சோஷியல் மீடியாவில் இணைந்த ஒரே நாளிலேயே 39,000 ஃபாலோயர்களை பெற்றுள்ளது சினிமா உலகை சேர்ந்த அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

டாப் ஹீரோக்கள், ஹீரோயின்களுக்கு இணையாக டைரக்டர்களுக்கும் தனி ரசிகர் பட்டாளம் உருவாகி வருகிறது. சமீப காலமாக ரசிகர்களின் ஃபேவரைட் டைரக்டர்களின் பட்டியலில் இணைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஷங்கர், வெற்றிமாறன், பாண்டிராஜ், விக்னேஷ் சிவன் என வித்தியாசமான படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்த டைரக்டர்களில் சுதா கொங்கராவும் ஒருவர்.

அஜித்தை இயக்குவாரா

அஜித்தை இயக்குவாரா

இறுதிச்சுற்று, சூரரைப் போற்று என அடுத்தடுத்து பிரம்மாண்ட ஹிட் கொடுத்த சுதா கொங்கரா, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். சூரரைப் போற்று படத்தை விரைவில் இவர் இந்தியிலும் ரீமேக் செய்ய போவதாக தகவல் வெளியாகி வருகிறது. சூர்யாவை வைத்து மற்றொரு படத்தை இயக்க சுதா கொங்கரா தயாராகி வருவதாக கூறப்படும் நிலையில், அஜித்தை வைத்தும் சுதா கொங்கரா படம் இயக்க போவதாகவும் கடந்த சில நாட்களாக ஒரு தகவல் பரவி வருகிறது.

ட்விட்டரில் இணைந்த பிரபலம்

ட்விட்டரில் இணைந்த பிரபலம்

வித்தியாசமான படம், மாஸ் ஹிட் என அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்து, கவனிக்கப்படும் டைரக்டராக உள்ள சுதா கொங்கராவின் பெயரில் சோஷியல் மீடியாவில் பல போலி கணக்குகள் துவங்கப்பட்டு, தவறாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சுதா கொங்கராவே ட்விட்டரில் புதிய கணக்கை துவங்கி உள்ளார். இவர் கணக்கை துவங்கிய சில நிமிடங்களிலேயே இவரின் ஃபாலேயர்களின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது.

ஒரே நாளில் இத்தனை ஃபாலோயர்சா

ஒரே நாளில் இத்தனை ஃபாலோயர்சா

ட்விட்டரில் சுதா கொங்கரா யாரையும் ஃபாலோ பண்ணாத நிலையில், ஒரே நாளில் அவரை ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 39,000 ஐ கடந்துள்ளது. இவரின் அடுத்தடுத்த படங்கள் பற்றிய தகவல்களை இதுவரை பல நடிகர், நடிகைகள், ரசிகர்கள் தான் ட்விட்டரில் பகிர்ந்து வந்தனர். ஆனால் இனி அவரே அதை தனது ரசிகர்களுடன் ட்விட்டர் மூலம் பகிர்ந்து கொள்ள போகிறார். ட்விட்டரில் சுதா கொங்கரா யாரையும் ஃபாலோ பண்ணாத நிலையில், ஒரே நாளில் அவரை ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 39,000 ஐ கடந்துள்ளது. இவரின் அடுத்தடுத்த படங்கள் பற்றிய இதுவரை பல நடிகர், நடிகைகள், ரசிகர்கள் தான் ட்விட்டரில் கேட்டு வந்தனர். ஆனால் இனி அவரே அதை தனது ரசிகர்களுடன் ட்விட்டர் மூலம் பகிர்ந்து கொள்ள போகிறார்.

Recommended Video

Sudha Kongara கண் கலங்கிட்டாங்க | Writer Shan Karuppasamy Exclusive | Filmibeat Tamil
இதுக்கா இத்தனை லைக்ஸ்

இதுக்கா இத்தனை லைக்ஸ்

ஒரே நாளிலில் சுதா கொங்கராவை ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை இப்படி உயர்ந்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. நடிகர், நடிகைகளுக்கு இணையாக ஒரு டைரக்டருக்கு இப்படி ஒரு வரவேற்பா என அனைவரும் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள். இது தான் என்னுடைய அஃபீசியல் பக்கம் என சுதா கொங்கரா போட்ட ஒரே ஒரு போஸ்ட்டுக்கு 50,000 லைக்குகள் குவிந்துள்ளது என்றால் பாருங்களேன். ஒரே நாளிலில் சுதா கொங்கராவை ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை இப்படி உயர்ந்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. நடிகர், நடிகைகளுக்கு இணையாக ஒரு டைரக்டருக்கு இப்படி ஒரு வரவேற்பா என அனைவரும் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள். இது தான் என்னுடைய அஃபீசியல் பக்கம் என சுதா கொங்கரா போட்ட ஒரே ஒரு போஸ்டுக்கு 50,000 லைக்குகள் குவிந்துள்ளது என்றால் பாருங்களேன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X