என்னை பாதிச்ச உண்மை சம்பவங்கள்... சூர்யா படம் பத்தி சுதா கொங்கரா சொன்ன சீக்ரெட்!

சென்னை : நடிகர் சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் சூர்யா 41 படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார். இந்தப் படம் இந்த ஆண்டு இறுதிக்குள் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் அடுத்தடுத்து வெற்றி மாறன் மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா கோலிவுட்டின் சிறப்பான ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகிறார். அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். இவரது சூரரை போற்று, ஜெய் பீம் மற்றும் எதற்கும் துணிந்தவன் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் விருப்பத்திற்கு உள்ளாகியுள்ளன.

அடுத்தடுத்த வெற்றிப்படங்கள்

அடுத்தடுத்த வெற்றிப்படங்கள்

குறிப்பாக சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியான போதிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இதில் ஜெய்பீம் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளையும் கைப்பற்றியுள்ளன.

சூர்யா 41 படம்

சூர்யா 41 படம்

இந்தப் படங்களை தொடர்ந்து தற்போது 18 ஆண்டுகளுக்கு பிறகு தன்னுடைய 41வது படத்திற்காக இயக்குநர் பாலா கூட்டணியில் இணைந்துள்ளார் சூர்யா. இவர்கள் கூட்டணியில் முன்னதாக வெளியான நந்தா மற்றும் பிதாமகன் படங்கள் பெரிய அதிர்வலைகளை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது இந்தக் கூட்டணி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

அடுத்தடுத்த வெற்றி இயக்குநர்கள்

அடுத்தடுத்த வெற்றி இயக்குநர்கள்

இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறனுடன் வாடிவாசல் படத்தில் இணையவுள்ளார். இந்தப் படத்தின் டெஸ்ட் சூட் சமீபத்தில் நடத்தப்பட்ட நிலையில், இந்தப் படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து சுதா கொங்கராவுடன் அடுத்தப் படத்திலும் இணையவுள்ளார் சூர்யா.

உண்மை சம்பவங்கள்

உண்மை சம்பவங்கள்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படம் பயோ பிக்காக வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது. இவர்கள் மீண்டும் இணையும் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தப் படம் பயோ பிக் இல்லை என்றும் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகவுள்ளதாக சுதா கொங்கரா சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சவால் நிறைந்த படம்

சவால் நிறைந்த படம்

சூரரைப் போற்று படத்தைக் காட்டிலும் இந்தப் படம் மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். மிகவும் பிரம்மாண்டமாக இந்தப் படம் உருவாகவுள்ளதால் தான் மிகவும் பயத்துடன் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் தன்னை மிகவும் பாதித்த கதையை தான் கையில் எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Sudha Kongara கண் கலங்கிட்டாங்க | Writer Shan Karuppasamy Exclusive | Filmibeat Tamil
கதையில் கவனம்

கதையில் கவனம்

தான் எப்போதுமே ஒரு கதையில் பயணிக்கும்போது அது அதிகமான தாக்கத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் வகையில் பார்த்துக் கொள்வதாகவும் 5 ஆண்டுகள் ஆனாலும் அது பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தன்னுடைய கதை இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். இந்தக் கதை அத்தகையதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X