மீண்டும் இணையும் சூரரைப் போற்று டீம்...இதுவும் பயோபிக் படமா ?

சென்னை : வரிசையாக அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வரும் சூர்யா, வாடிவாசல் படத்திற்கு பிறகு மீண்டும் சூரரைப் போற்று டைரக்டர் சுதா கொங்கரா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க போவது உறுதியாகி உள்ளது.

கொரோனா காலத்திலும் விடாமல் அடுத்தடுத்த படங்களில் நடித்து, ஓடிடியில் ரிலீஸ் செய்து பாராட்டை பெற்று சர்வதேச கவனத்தை ஈர்த்தவர் சூர்யா. தற்போது எதற்கும் துணிந்தவன் படத்தை தொடர்ந்து பாலா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் கன்னியாகுமரியில் நடந்து வருகிறது.

சூர்யா போட்ட கன்டிஷன்

சூர்யா போட்ட கன்டிஷன்

டைரக்டர் பாலாவிடம், படத்தை மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என சூர்யா கேட்டுள்ளாராம். இதனால் ஜுலை மாதத்திற்குள் படத்தை முடிக்க விறுவிறுப்பாக ஷுட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் டெஸ்ட் ஷுட் சமீபத்தில் ஈசிஆரில் அமைக்கப்பட்டுள்ள செட்டில் நடத்தப்பட்டது.

அடுத்து யாருடைய படம்

அடுத்து யாருடைய படம்

வாடிவாசல் படத்துடன் சேர்த்து சிறுத்தை சிவா அல்லது பாண்டியராஜ் இயக்கும் மற்றொரு படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், சூர்யாவை வைத்து மற்றொரு படத்தை இயக்க டைரக்டர் சுதா கொங்கரா திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டது. சூரரைப் போற்று படத்திற்கு பிறகு, மீண்டும் சூர்யா-சுதா கொங்கரா இணைவது உறுதியாகி விட்டதாக அவரே சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.

இதுவும் பயோபிக் படமா

இதுவும் பயோபிக் படமா

டிவி சேனல் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், சூர்யாவை வைத்து மற்றொரு படத்தை இயக்க போகிறேன். இது உண்மை கதையை தழுவிய கதையாக இருக்கும். இந்த படம் உண்மை சம்பவ அடிப்படையிலானதா அல்லது பயோபிக்கா என இன்னும் முடிவு செய்யவில்லை என்றார். ஆனால் இந்த படம் உண்மை சம்பவத்தின் அடிப்படையிலான கதையாக தான் இருக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதனால் இந்த படம் செம ஹிட் ஆவது உறுதி என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் சுதா கொங்கரா, அஜித்தை வைத்து ஒரு படம் இயக்க போவதாகவும் கோலிவுட்டில் ஒரு பேச்சு உலா வருகிறது.

உண்மை கதைகளை விரும்பும் சூர்யா

உண்மை கதைகளை விரும்பும் சூர்யா

சூர்யா கடைசியாக நடித்த 3 படங்களும் உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டது தான். சூரரைப் போற்று படம் கேப்டன் கோபிநாத்தின் பயோபிக், ஜெய்பீம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. எதற்கும் துணிந்தவன் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை மையமாகக் கொண்டது. வெற்றிறாமன் இயக்கும் வாடிவாசல் படம், வாடிவாசல் நாவலை மையமாகக் கொண்ட படம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X