மீண்டும் சூரரைப் போற்று கூட்டணி…? சுதா கொங்கரா படத்தின் கதை... ஹோம்பலே ஃபிலிம்ஸ் கொடுத்த அப்டேட்

சென்னை: சுதா கொங்கரா தற்போது 'சூரரைப் போற்று' படத்தின் இந்தி ரீமேக்கை இயக்கி வருகிறார்.

சூரரைப் போற்று இந்தி வெர்ஷனில் அக்சய் குமார் நடித்து வரும் நிலையில், அடுத்து ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்காக படம் இயக்குகிறார் சுதா கொங்கரா.

இந்தப் படம் ரத்தன் டாடாவின் பயோபிக்காக உருவாகவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அதுகுறித்து படக்குழு அப்டேட் கொடுத்துள்ளது

சூரரைப் போற்று இந்தி ரீமேக்

சூரரைப் போற்று இந்தி ரீமேக்

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கிய 'சூரரைப் போற்று' திரைப்படம் 5 தேசிய விருதுகளை வென்ரது. நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியான இந்தப் படம், ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கையை பின்னனியாகக் கொண்டு உருவாகியிருந்தது. சூர்யாவிற்கு சிறந்த நடிகர், அபர்ணாவுக்கு சிறந்த நடிகை, ஜிவி பிரகாஷ்க்கு சிறந்த இசையமைப்பாளர் உட்பட மொத்தம் 5 விருதுகளை சூரரைப் போற்று வென்று கொடுத்தது. இந்தப் படம் தற்போது இந்தியில் அக்சய் குமார் நடிப்பில் ரீமேக் ஆகி வருகிறது. இந்தி வெர்ஷனையும் சுதா கொங்கராவே இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சுதா

ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சுதா

சூரரைப் போற்று இந்தி வெர்ஷன் ஷூட்டிங் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் படம் இயக்கவுள்ளார் சுதா. இந்தக் கூட்டணி உறுதியாகிவிட்டது என்றாலும், படத்தின் டைட்டில், ஹீரோ, கதை ஆகியவை குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனிடையே, இந்தப் படம் ரத்தன் டாடாவின் பயோபிக்காக உருவாகவுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஏற்கனவே ஏர் டெக்கான் கோபிநாத்தின் பயோபிக்காக சூரரைப் போற்று படத்தை இயக்கிய, அடுத்து ரத்தன் டாடாவின் வாழ்க்கை பின்னணியில் படம் இயக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

சூர்யா – அபிஷேக் பச்சன்

சூர்யா – அபிஷேக் பச்சன்

முக்கியமாக சுதா இயக்கவுள்ள இந்தப் படத்தில் சூர்யா அல்லது பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் ரத்தன் டாடா கேரக்டரில் நடிக்கலாம் என தகவல்கள் வெளியாகின. அபிஷேக் பச்சன் ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் அம்பானியின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட குரு படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், சூர்யா அல்லது அபிஷேக் பச்சன் சுதாவின் முதல் தேர்வாக இருக்கலாம் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், இது உண்மையில்லை என படக்குழு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது உண்மை கதை

இது உண்மை கதை

சுதா கொங்கரா இயக்கவுள்ள திரைப்படம் குறித்து பேசியுள்ள ஹோம்பலே பிலிம்ஸின் கிரியேட்டிவ் தயாரிப்பாளரான கார்த்திக் கௌடா, இது முற்றிலும் தவறானது, சுதா கொங்கரா இயக்கும் படம் ரத்தன் டாடாவின் பயோபிக் கிடையாது. இது சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகும் எனக் கூறியுள்ளார். இதனால் சுதா கொங்கரா படம் குறித்து வெளியான தகவல்கள் உண்மையில்லை என உறுதியாகியுள்ளது. அதேநேரம், சுதா இயக்கும் படத்தில் சூர்யா தான் ஹீரோவாக நடிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X