»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

நடிகை சுகன்யாவின் விவாகரத்து வழக்கை விசாரிக்க தடை ஏதும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம்தீர்ப்பு வழங்கியுள்ளது.

சுகன்யாவுக்கும், அமெரிக்காவில் கம்ப்யூட்டர் பொறியாளராக பணியாற்றி வரும் ஸ்ரீதர் என்பவருக்கும் கடந்த2002ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின் சுகன்யாவும் அமெரிக்கா சென்றார்.

ஆனால் 6 மாதங்களில் அவர் தமிழகம் திரும்பினார். உடனடியாக சென்னை குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்துகோரி மனு செய்தார். இதுதொடர்பாக நேரில் ஆஜராகுமாறு குடும்ப நீதிமன்றம் ஸ்ரீதருக்கு பல முறை சம்மன்அனுப்பியது. ஆனால் ஸ்ரீதர் ஆஜராகவில்லை.

இதையடுத்து சுகன்யாவுக்கு விவாகரத்து வழங்கி குடும்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. இந் நிலையில் சென்னை வந்தஸ்ரீதர், தன்னை விசாரிக்காமல் விவாகரத்து வழங்கியது செல்லாது, எனவே மீண்டும் விவாகரத்து வழக்கைவிசாரிக்க வேண்டும் என்று கோரி குடும்ப நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

ஆனால், விவாகரத்து வழக்கை மீண்டும் விசாரிக்கக் கூடாது என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சுகன்யாசார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி அசோக்குமார் இன்று தீர்ப்பளித்தார்.

குடும்ப நீதிமன்றம் விவாகரத்து வழக்கை மீண்டும் விசாரிக்கலாம் என்று அனுமதி தந்த நீதிபதி, விசாரணைக்குத்தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பளித்தார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil