»   »  சுகன்யாவுக்கு விவாகரத்து அனுமதிநடிகை சுகன்யாவுக்கு அவரது அமெரிக்க கணவரிடம் இருந்து சென்னை குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்துவழங்கியுள்ளது. பானுப்பிரியா, நளினி, சீதா, பாபிலோனா, ஹீரா, டிவி நடிகை சர்மிளா, சொர்ணமால்யா என விவாகரத்துக்காகநீதிமன்ற வாசல் ஏறும் நடிகைகளின் லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. இதில் சுகன்யாவும் ஒருவர்.புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சுகன்யா. பரதநாட்டியக் கலைஞரானஇவரை பாரதிராஜா சினிமாவுக்கு அழைத்து வந்தார். சின்னகவுண்டர், மகாநதி, வால்டர் வெற்றிவேல் உள்பட பலவெற்றிப் படங்களில் நடித்து முன்ணி நடிகையாகத் திகழ்ந்தார். ஒரு கட்டத்தில் மார்க்கெட் சரிந்துவிட, இவருக்கும், சென்னை பெசண்ட் நகரில் இவருக்கு பக்கத்து வீட்டில் வசித்துவந்த ஸ்ரீதர் என்பவருக்கும் பெற்றோர்கள் திருமணம் நிச்சயம் செய்தனர். ஸ்ரீதர் அமெரிக்காவில் கம்ப்யூட்டர்என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பின் கணவருடன் சுகன்யாஅமெரிக்காவிற்கு சென்றார். சில மாதங்கள் சந்தோஷமாக வாழ்ந்த அவர்களின் வாழ்க்கையில் திடீரென்றுமனக்கசப்புகள் தோன்ற ஆரம்பித்தன. இதையடுத்து சுகன்யா சென்னை வந்துவிட்டார். கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நலநீதிமன்றத்தில் இருந்து மனுத் தாக்கல் செய்தார். தன்னை ஸ்ரீதர் கொடுமைப்படுத்துவதாகவும், எனவே அவரிடம்இருந்து விவாகரத்து வாங்கித் தரும்படியும் தனது மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த முதன்மை நீதிபதி புஷ்பா துரைசாமி, இது தொடர்பாக பதிலளிக்க நீதிமன்றத்தில்ஆஜராகுமாறு ஸ்ரீதருக்கு நீதிபதி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். 4 முறை நோட்டீஸ் அனுப்பியும் ஸ்ரீதர்நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.இதையடுத்து சுகன்யாவுக்கு விவாகரத்து வழங்கி நீதிபதி புஷ்பா துரைசாமி தீர்ப்பளித்தார். சுகன்யா தற்போது டி.வி.நிகழ்ச்சிகளிலும் ஓரிரண்டு தமிழ்ப் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

சுகன்யாவுக்கு விவாகரத்து அனுமதிநடிகை சுகன்யாவுக்கு அவரது அமெரிக்க கணவரிடம் இருந்து சென்னை குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்துவழங்கியுள்ளது. பானுப்பிரியா, நளினி, சீதா, பாபிலோனா, ஹீரா, டிவி நடிகை சர்மிளா, சொர்ணமால்யா என விவாகரத்துக்காகநீதிமன்ற வாசல் ஏறும் நடிகைகளின் லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. இதில் சுகன்யாவும் ஒருவர்.புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சுகன்யா. பரதநாட்டியக் கலைஞரானஇவரை பாரதிராஜா சினிமாவுக்கு அழைத்து வந்தார். சின்னகவுண்டர், மகாநதி, வால்டர் வெற்றிவேல் உள்பட பலவெற்றிப் படங்களில் நடித்து முன்ணி நடிகையாகத் திகழ்ந்தார். ஒரு கட்டத்தில் மார்க்கெட் சரிந்துவிட, இவருக்கும், சென்னை பெசண்ட் நகரில் இவருக்கு பக்கத்து வீட்டில் வசித்துவந்த ஸ்ரீதர் என்பவருக்கும் பெற்றோர்கள் திருமணம் நிச்சயம் செய்தனர். ஸ்ரீதர் அமெரிக்காவில் கம்ப்யூட்டர்என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பின் கணவருடன் சுகன்யாஅமெரிக்காவிற்கு சென்றார். சில மாதங்கள் சந்தோஷமாக வாழ்ந்த அவர்களின் வாழ்க்கையில் திடீரென்றுமனக்கசப்புகள் தோன்ற ஆரம்பித்தன. இதையடுத்து சுகன்யா சென்னை வந்துவிட்டார். கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நலநீதிமன்றத்தில் இருந்து மனுத் தாக்கல் செய்தார். தன்னை ஸ்ரீதர் கொடுமைப்படுத்துவதாகவும், எனவே அவரிடம்இருந்து விவாகரத்து வாங்கித் தரும்படியும் தனது மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த முதன்மை நீதிபதி புஷ்பா துரைசாமி, இது தொடர்பாக பதிலளிக்க நீதிமன்றத்தில்ஆஜராகுமாறு ஸ்ரீதருக்கு நீதிபதி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். 4 முறை நோட்டீஸ் அனுப்பியும் ஸ்ரீதர்நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.இதையடுத்து சுகன்யாவுக்கு விவாகரத்து வழங்கி நீதிபதி புஷ்பா துரைசாமி தீர்ப்பளித்தார். சுகன்யா தற்போது டி.வி.நிகழ்ச்சிகளிலும் ஓரிரண்டு தமிழ்ப் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

Subscribe to Oneindia Tamil

நடிகை சுகன்யாவுக்கு அவரது அமெரிக்க கணவரிடம் இருந்து சென்னை குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்துவழங்கியுள்ளது.

பானுப்பிரியா, நளினி, சீதா, பாபிலோனா, ஹீரா, டிவி நடிகை சர்மிளா, சொர்ணமால்யா என விவாகரத்துக்காகநீதிமன்ற வாசல் ஏறும் நடிகைகளின் லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. இதில் சுகன்யாவும் ஒருவர்.

புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சுகன்யா. பரதநாட்டியக் கலைஞரானஇவரை பாரதிராஜா சினிமாவுக்கு அழைத்து வந்தார். சின்னகவுண்டர், மகாநதி, வால்டர் வெற்றிவேல் உள்பட பலவெற்றிப் படங்களில் நடித்து முன்ணி நடிகையாகத் திகழ்ந்தார்.

ஒரு கட்டத்தில் மார்க்கெட் சரிந்துவிட, இவருக்கும், சென்னை பெசண்ட் நகரில் இவருக்கு பக்கத்து வீட்டில் வசித்துவந்த ஸ்ரீதர் என்பவருக்கும் பெற்றோர்கள் திருமணம் நிச்சயம் செய்தனர். ஸ்ரீதர் அமெரிக்காவில் கம்ப்யூட்டர்என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.

2 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பின் கணவருடன் சுகன்யாஅமெரிக்காவிற்கு சென்றார். சில மாதங்கள் சந்தோஷமாக வாழ்ந்த அவர்களின் வாழ்க்கையில் திடீரென்றுமனக்கசப்புகள் தோன்ற ஆரம்பித்தன.

இதையடுத்து சுகன்யா சென்னை வந்துவிட்டார். கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நலநீதிமன்றத்தில் இருந்து மனுத் தாக்கல் செய்தார். தன்னை ஸ்ரீதர் கொடுமைப்படுத்துவதாகவும், எனவே அவரிடம்இருந்து விவாகரத்து வாங்கித் தரும்படியும் தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த முதன்மை நீதிபதி புஷ்பா துரைசாமி, இது தொடர்பாக பதிலளிக்க நீதிமன்றத்தில்ஆஜராகுமாறு ஸ்ரீதருக்கு நீதிபதி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். 4 முறை நோட்டீஸ் அனுப்பியும் ஸ்ரீதர்நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இதையடுத்து சுகன்யாவுக்கு விவாகரத்து வழங்கி நீதிபதி புஷ்பா துரைசாமி தீர்ப்பளித்தார். சுகன்யா தற்போது டி.வி.நிகழ்ச்சிகளிலும் ஓரிரண்டு தமிழ்ப் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil