»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு முற்றியுள்ளதால், சுகன்யா விவாகரத்து பெறுவது கிட்டத்தட்டஉறுதியாகிவிட்டது. இதற்கிடையே சுகன்யாவின் விவகாரத்தில் ஒரு முன்னாள் அமைச்சரும் தலையிடமுயன்றதாகத் தெரிகிறது.

சுகன்யா விவாகரத்து வழக்கு தொடர்ந்தால், அவரிடம் நஷ்டஈடு கேட்க கணவர் ஸ்ரீதர் முடிவு செய்துள்ளதாகத்தெரிகிறது.

கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறியுள்ள சுகன்யா அதையே சுட்டிக் காட்டி தனதுவழக்கறிஞர் சந்துரூ மூலமாக விவகாரத்து நோட்டீஸ் அனுப்பினார்.

இதற்குப் பதிலடியாக வழக்கறிஞர் நளினி மூலம் கணவர் ஸ்ரீதர் பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், பதில் நோட்டீஸில், இணைந்து வாழவே விரும்புவதாகவும், சுகன்யாவுக்காக ஏகப்பட்ட செலவுசெய்துள்ளதாகவும், சுகன்யா சேர்ந்து வாழ மறுத்தால் அமெரிக்காவில் வழக்கு தொடரப் போவதாகவும் ஸ்ரீதர்எச்சரித்துள்ளார். மேலும் சுகன்யாவுக்காக செய்த செலவுகளைத் திருப்பிக் கேட்டு நஷ்டஈடு வழக்கும்தொடர்வேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சுகன்யாவின் வழக்கறிஞர் சந்துரு கூறுகையில், ஸ்ரீதர் அனுப்பிய நோட்டீஸை நாங்கள் புறக்கணித்துவிட்டோம். இதற்கு மேல் அதைப் பற்றி பேச ஒன்றுமில்லை என்றார்.

அமெரிக்காவில் உள்ள நியூஜெர்ஸியில், அமெரிக்க குடியுரிமை சட்டப்படி இவர்களது திருமணம் நடந்தது.இதனால் தான் சுகன்யா கணவருடன் அங்கேயே வசிக்க முடிந்தது. இதனால் சுகன்யாவுக்கு எதிராக அங்குவழக்குத் தொடர முடியும்.

ஸ்ரீதருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகக் கருதும் சுகன்யா அவரது நடவடிக்கைகளால் வெறுத்துப்போய் தான் அமெரிக்காவில் இருந்து சென்னைக்குத் திரும்பிவிட்டதாக அவரது தரப்பில் கூறுகின்றனர். இப்போதுபெற்றோருடன் பெசன்ட் நகர் 5 வது அவென்யூவில் உள்ள தனது பிளாட்டில் வசித்து வருகிறார். ஸ்ரீதரின்விருப்பத்துக்கு எதிராக சினிமாவில் நடிப்பதில் மிகத் தீவிரமாக இருக்கிறார்.

இந் நிலையில் ஸ்ரீதருக்கும் சுகன்யாவும் இடையே நகைகள் தொடர்பாக ஏராளமான கடித, இ-மெயில்போக்குவரத்தும் நடந்துள்ளது. தன்னுடையை நகைகளைத் தந்துவிடும்படி சுகன்யா பலமுறை ஸ்ரீதரிடம்கோரியுள்ளார். இதையடுத்து அவற்றை ஸ்ரீதர் தந்துவிட்டதாகவும், ஆனாலும் மீண்டும் சுகன்யாவுடன் சேர்ந்துவாழ்வதிலேயே அவர் குறியாய் உள்ளதாகவும் தெரிகிறது.

விவகாரத்துக்கு ஒப்புக் கொள்ள மறுத்த ஸ்ரீதரை கடந்த மாதம் சென்னைக்கு வரச் சொல்லிக் கூட சுகன்யா மெயில்அனுப்பியுள்ளார். சென்னையில் வைத்து பஞ்சாயத்து பேசி தீர்வுக்கு வரலாம் என்று சுகன்யா கூறியுள்ளார்.

ஆனால், பஞ்சாயத்து நடக்கும் இடம் ஒரு முன்னாள் அமைச்சருக்குச் சொந்தமான பங்களாவில் என்பதைசத்தெரிந்து கொண்ட ஸ்ரீதர், தன்னை அடியாட்களை வைத்து மிரட்டலாம் என்பதால் அதைத் தவிர்த்துவிட்டதாகவும்செய்திகள் வருகின்றன.

இதையடுத்து வேறோரு இடத்தில் வைத்து பஞ்சாயத்து நடத்த சுகன்யா தரப்பு ஒப்புக் கொண்டது. இதையடுத்துஅமெரிக்தாவில் இருந்து ஸ்ரீதர் சென்னை வந்தார். அந்த பஞ்சாயததிலும் பங்கேற்றாக். அதில் சுகன்யாவின்பெற்றோரும், சுகன்யாவும் இரு தரப்பிலும் வழக்கறிஞர்களும் கலந்து கொண்டனர்.

அப்போதும் ஸ்ரீதரிடம் இருந்து விலகுவதில் தான் சுகன்யா தீவிர ஆர்வம் காட்டினார். ஆனால், சுகன்யாவுடன்சேர்ந்து வாழ விரும்புவதாகவே ஸ்ரீதர் கூறியுள்ளார்.

தொடர்ந்து விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ளுமாறு ஸ்ரீதர் மிரட்டப்பட்டதாகவும், இதையடுத்து, விவாகரத்துசெய்தாலும் அதை அமெரிக்கச் சட்டப்படி தான் நான் செய்வேன் என்று கூறிவிட்டு ஸ்ரீதர் சென்றுவிட்டதாகத்தெரிகிறது.

இதன் பிறகு தான் சுகன்யா வக்கீல் நோட்டீஸ் அனுப்ப, பதிலுக்கு ஸ்ரீதரும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

  • விவாகரத்து கேட்டது உண்மை: சுகன்யாவின் கணவர்
  • சுகன்யா விவாகரத்து?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil