»   »  என்னை வியக்க வைத்த "ஆச்சி"... சுகன்யா நிகழ்ச்சி

என்னை வியக்க வைத்த "ஆச்சி"... சுகன்யா நிகழ்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னக் கவுண்டர் படத்தில் நடித்தபோது மனோரமா அவர்களின் நடிப்பு என்னை வியக்க வைத்தது. அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன் என்று நடிகை சுகன்யா கூறியுள்ளார்.

மறைந்த நடிகை மனோரமாவுக்கு திரையுலகினர் தொடர்ந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகை சுகன்யாவும் மனோரமாவின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

Suganya pays rich tributes to Manorama

பின்னர் செய்தியாளர்களிடம் சுகன்யா பேசுகையில், ஆச்சி மனோரமாவைப் போல ஒரு நடிகையை இனி பார்க்கவே முடியாது. அத்தனை வேடங்களை ஏற்று நடித்த சாதனையாளர் அவர்.

Suganya pays rich tributes to Manorama

அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளது. சின்னக் கவுண்டர் படத்தில் நடித்தபோது அவரது அசாத்திய நடிப்புத் திறமையை அருகே இருந்து பார்த்து வியந்து போனேன். அப்படி ஒரு நடிகை அவர். அவரது மறைவு திரையுலகுக்கு மிகப் பெரிய இழப்பு என்றார் சுகன்யா.

English summary
Actress Suganya who has acted with Manorama in Chinna Goundar, has paid rich tributes to the veteran actress.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil