»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

நடிகை சுகன்யாவுக்கும் அவரது கணவருக்கும் வழங்கப்பட்ட விவாகரத்தை சென்னை குடும்ப நல நீதிமன்றம் ரத்துசெய்தது.

நடிகை சுகன்யாவுக்கும் அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஸ்ரீதருக்கும் கடந்த 2002ல்திருமணம் நடந்தது. இருவரும் அமெரிக்காவில் 4 மாதம் குடித்தனம் செய்தனர்.

பின்னர், சுகன்யா மீண்டும் நடிக்க விரும்பினார். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.இதனையடுத்து சுகன்யா கணவரை பிரிந்து சென்னை வந்து விட்டார்.

ஒராண்டிற்கும் மேலாக கணவரைப் பிரிந்து வாழ்ந்த சுகன்யா விவாகரத்து கோரி சென்னை குடும்பநலநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதற்கு பதில் அளிக்கும்படி 4 முறை நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியும்ஸ்ரீதர் கோர்ட்டில் ஆஜராகவில்லை.

எனவே, கடந்த ஜூலை மாதம் 19ம் தேதி விவாகரத்து வழங்கி நீதிபதி புஷ்பா துரைசாமி தீர்ப்பு வழங்கினார்.

இதை அறிந்த ஸ்ரீதர் அதே நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். நீதிமன்றம் அனுப்பிய நோட்டீசு தனக்குகிடைக்கவில்லை என்றும், அதனால்தான் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றும் அந்த மனுவில் கூறியிருந்தார்.

சுகன்யாவுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும், எனவே இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என்றும்இன்னொரு மனுவை ஸ்ரீதர் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா துரைசாமி, சுகன்யாவுக்கும் அவரது கணவருக்கும் விவாகரத்து வழங்கிஅளித்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார். நீதிமன்ற செலவாக சுகன்யாவிற்கு ஸ்ரீதர் ரூ.2,000 வழங்கவும்உத்தரவிட்டார்.

ஸ்ரீதர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 5ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil