»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

மனநலம் குன்றியவர்களுக்கான கல்விக்கு உதவ சென்னையில் நடிகை சுகன்யா பங்கேற்கும் பரத நாட்டிய நாளை நடக்கிறது.

மன நலம் குன்றியோர் நல அமைப்பான வி-எக்ஸெல் நிறுவனத்துக்கு நிதி திரட்டித் தந்து உதவ இந் நிகழ்ச்சி நடக்கிறது. காமராஜர்அரங்கில் நடக்கும் இந் நிகழ்ச்சியை பரத கலா அகாடெமி என்ற அமைப்பு நடத்துகிறது.

திரைப்படங்களில் வந்த பரதநாட்டியப் பாடல்களுக்கு நடிகைகள் சுகன்யா, சினிமா-டிவி நடிகை கீர்த்தனா, மெட்டி ஒலி காயத்ரி,நடனக் கலைஞர்களான சஞ்சய் பரத்வாஜ், மூர்த்தி ஆகியோர் நடனமாடுகிறார்கள்.

அத்தோடு மாணவ, மாணவிகளின் நடனமும், மேற்கத்திய இசைக்கான நடன நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.

ஜெயம் ரவி, இசையமைப்பாளர் தேவா, நடிகை பாத்திமா பாபு, டிவி நடிகர் விஜய் ஆதிராஜ் போன்றவர்களும் இதில்பங்கேற்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியை தயாரித்து அளிக்கப் போவது பிபரல வித்வான் தஞ்சை கிட்டப்பாவின் மாணவியான புஷ்பகலா ரமேஷ்.

நடிகை சுகன்யா முன்னாள் கலாஷேத்ரா மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. மிகச் சிறந்த பரதநாட்டியக் கலைஞராக வரவேண்டும் என்ற தீவிரத்தில் இருந்த சுகன்யாவை சினிமா இழுத்துவிட்டது.

இப்போது மிக நீண்ட நாட்களுக்குப் பின் மேடையேறப் போகிறார்.

அதே போல கதாநாயகியாக அறிமுகமாகி, இப்போது திரைப்படங்களில் சின்னச் சின்ன ரோல்கள் செய்து வரும் கீர்த்தனாவும்சிறந்த பரதக் கலைஞராவார்.

Read more about: chennai, tamil, suganya, dance, stage
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil