»   »  யுஎஸ் விபத்தில் சிக்கியது உண்மை- சுஹாசினி

யுஎஸ் விபத்தில் சிக்கியது உண்மை- சுஹாசினி

Subscribe to Oneindia Tamil

அமெரிக்காவில் காரில் போய்க் கொண்டிருந்தபோது தான் விபத்தில் சிக்கியது உண்மைதான் என்று நடிகை சுஹாசினி கூறியுள்ளார்.


சில தினங்களுக்கு முன்பு, சுஹாசினி அமெரிக்காவில் விபத்தில் சிக்கிக் கொண்டார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் இதை சுஹாசினி தரப்பில் இல்லை என்றனர்.

இந்த நிலையில் அமெரிக்கா சென்றிருந்த சுஹாசினி சென்னை திரும்பியுள்ளார். தான் அமெரிக்கா சென்றிருந்தபோது அங்கு விபத்தில் சிக்கியது உண்மைதான் என்று கூறியுள்ளார் சுஹாசினி.

விபத்து குறித்து அவர் கூறுகையில், கடந்த வாரம் தெலுங்குப் படப்பிடிப்புக்காக நான் அமெரிக்கா சென்றிருந்தேன். வாஷிங்டனில் படப்பிடிப்பை முடித்த பின்னர் தமிழ்ச் சங்க விழாவில் கலந்து கொண்டேன்.

அப்போது நான் சென்ற கார் இன்னொரு காருடன் மோதியது. இதில், நான உள்பட 5 பேர் காயமடைந்தோம்.

எனக்கு நெஞ்சில் அடிபட்டு விட்டது. உடன் வந்த தயாரிப்பாளர் உள்பட 5 பேருக்கும் நல்ல காயம். ஆனால் அனைவரும் சிகிச்சை பெற்று குணமடைந்தோம்.

நான் சென்னைக்கு வந்ததும் இங்குள்ள மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றேன். 3 நாள் ஓய்வெடுத்தால் நல்லது என்று டாக்டர்கள் கூறியுள்ளனர் என்றார் சுஹாசினி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil