Don't Miss!
- News
ரொம்ப அரிதான நிகழ்வு.. "இந்த" தேதியில் இங்கெல்லாம் மழை கொட்டும்.. தமிழ்நாடு வெதர்மேன் தந்த வார்னிங்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Sports
ஹர்திக் பாண்டியா முன் காத்திருக்கும் சவால்..ஒரு தவறு செய்தால் மொத்தமாக குளோஸ்..பாடம் கற்பாரா கேப்டன்?
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
எங்க வீட்டு மாடித்தோட்டத்தில் விளைந்த ப்ரஷ் காய்கறிகள்.. நடிகை சுஹாசினி !
சென்னை : முன்னணி நடிகை, இயக்குனர், டயலாக் ரைட்டர், டப்பிங் ஆர்டிஸ்ட் என பல முகங்களை கொண்டிருப்பவர் நடிகை சுஹாசினி மணிரத்னம்.
பெண், இந்திரா, புத்தம் புது காலை என சில திரைப்படங்களையும் சீரியல்களையும் இயக்கி உள்ளார்.
குடும்பத்தோட
பாட்டுக்
கச்சேரி...
கிடாருடன்
களத்தில்
இறங்கிய
நகுல்
தமிழ் கன்னடம் மலையாளம் ஹிந்தி தெலுங்கு என பல மொழிகளில் நடித்துள்ள சுஹாசினி மணிரத்னம் வீட்டு மாடித் தோட்டத்தில் விளைந்த காய்கறிகள் குறித்து பதிவிட்டுள்ளார்.

குணச்சித்திர வேடங்களில்
80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை சுஹாசினி மணிரத்னம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் எக்கச்சக்கமான வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்பொழுதும் பல படங்களில் அம்மா மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இயக்குனராக சினிமாவில்
பெண் என்ற பிரபலமான சீரியலை இயக்கிய பிறகு அனுஹாசன், அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான இந்திரா என்ற படத்தை இயக்கி இயக்குனராக சினிமாவில் அறிமுகமானார். நீண்ட காலமாக எந்த ஒரு திரைப்படத்தையும் இயக்காமல் இருந்த சுஹாசினி சென்ற ஆண்டு லாக் டவுனில் புத்தம் புது காலை ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

தென்னிந்தியாவில் முன்னணி
தமிழில் நெஞ்சத்தைக் கிள்ளாதே மூலம் நடிகையாக அறிமுகமான சுஹாசினி அதைத்தொடர்ந்து கோபுரங்கள் சாய்வதில்லை, சிந்து பைரவி, மனதில் உறுதி வேண்டும், தர்மத்தின் தலைவன், என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான், சின்ன கண்ணம்மா என எண்ணற்ற வெற்றிப்படங்களில் நடித்து தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருந்தவர்.

பிரஷ்ஷான காய்கறிகள்
தெலுங்கில் குர்துண்டா சீத்தாகளம்,மலையாளத்தில் மரக்கார், தமிழில் ஹோ அந்த நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் இவர் வீட்டு மாடித் தோட்டத்தில் அனைத்து வருமான காய்கறி மற்றும் கீரை வகைகளை பயிரிட்டு உள்ளார். கோவிட் லாக்டவுன் போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் நல்ல ஆரோக்கியமான காய்கறிகள் கிடைப்பது அரிதாக இருக்கும் சமயத்தில் இதுபோன்ற வீட்டு மாடித்தோட்டம் மூலம் கிடைக்கும் காய்கறிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது என தன்னுடைய வீட்டு மாடி தோட்டத்தில் விளைந்த பிரஷ்ஷான காய்கள் குறித்து பதிவிட்டுள்ளார்.