»   »  மணிரத்னம் பற்றிய யாருக்கும் தெரியாத ரகசியம் சொன்ன சுஹாசினி!

மணிரத்னம் பற்றிய யாருக்கும் தெரியாத ரகசியம் சொன்ன சுஹாசினி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
மணிரத்னம் பற்றிய யாருக்கும் தெரியாத ரகசியம் சொன்ன சுஹாசினி!- வீடியோ

சென்னை : இந்திய சினிமாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம். அவரது மேக்கிங் ஸ்டைலுக்கெனவே ரசிகர் பட்டாளம் உண்டு.

ஹீரோக்களுக்காக படம் பார்த்த ரசிகர்கள் மத்தியில் இயக்குநருக்கான படம் பார்க்கும் ரசிகர்கள் இருப்பது மணிரத்னத்துக்குதான்.

'அபியும் அனுவும்' படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில், மணிரத்னம் பற்றிய பரவலாகத் தெரியாத ரகசியத்தைக் கூறியுள்ளார் சுஹாசினி.

முன்னணி இயக்குநர்

முன்னணி இயக்குநர்

1983-ல் 'பல்லவி அனு பல்லவி' என்ற கன்னட படத்தில் இயக்குனராக அறிமுகமான மணிரத்னம் 1985-ல் 'பகல்' நிலவு படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதையடுத்து இதயகோயில், மெளனராகம், நாயகன், அஞ்சலி என அடுத்தடுத்து மெகா ஹிட் படங்களை எடுத்து முன்னணி இயக்குனரானார்.

செக்கச் சிவந்த வானம்

செக்கச் சிவந்த வானம்

மணிரத்னம் கடைசியாக இயக்கிய 'காற்று வெளியிடை' படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தற்போது செக்கச்சிவந்த வானம் என்ற மல்டி ஹீரோ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் மணிரத்னத்தின் 38-வது படமாகும்.

உதவி இயக்குநராக

உதவி இயக்குநராக

மணிரத்னம் புனேயிலுள்ள இன்ஸ்டிடியூட்டில் படித்துவிட்டு நேராக படம் இயக்க வந்து விட்டார் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவரும் ஒரு படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறாராம்.

சுஹாசினி

சுஹாசினி

இந்த தகவலை சமீபத்தில் நடைபெற்ற 'அபியும் அனுவும்' படத்தின் பிரஸ்மீட்டில் கலந்து கொண்ட சுஹாசினி மணிரத்னம் தெரிவித்தார். "ஒரு விஷயம் வெளியில் தெரியாததால், மணிரத்னம் எந்த இயக்குனரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றவில்லை என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்" என்றார்.

உதவி இயக்குநராக

உதவி இயக்குநராக

"புனே இன்ஸ்டிடியூட்டில் இருந்து வந்தபிறகு பி.ஆர்.ரவீந்திரன் கன்னடத்தில் விஷ்ணுவர்தனை வைத்து இயக்கிய ஒரு படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். அதன் பிறகுதான் மணிரத்னம் தனித்து படம் இயக்கினார்." எனக் கூறியுள்ளார சுஹாசினி.

English summary
Suhasini maniratnam reveals the secret about director Maniratnam. Maniratnam worked assistant director of Kannada director P.R.Ravindran.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil