twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காவிரி விவகாரம் பத்தி நான் ஒண்ணுமே சொல்லலயே..! - சுகாசினி

    By Shankar
    |

    காவிரி பிரச்சினையில் கர்நாடகத்துக்கு ஆதரவாக நான் கருத்து தெரிவிக்கவில்லை என்று நடிகை சுகாசினி விளக்கம் அளித்துள்ளார்.

    காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகத்துக்கு செப்.6-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மண்டியா, மைசூரு, பெங்களூரில் கன்னட அமைப்புகள், விவசாய சங்கங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.

    Suhasini's denial on Cauvery issue

    காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதை உடனடியாக நிறுத்த கோரி வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடந்தது. தமிழ் நாளிதழ்கள் கொளுத்தப்பட்டன. தமிழக வாகனங்கள் தடுக்கப்பட்டன.

    இந்நிலையில் காவிரி விவகாரத்தில் நடிகை சுஹாசினி கர்நாடகத்துக்கு ஆதரவான நிலை எடுத்துள்ளதாக வாட்சப்பில் தகவல்கள் பரவின.

    இந்நிலையில் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விளக்கம்: "காவிரிப் பிரச்சினை தொடர்பாக நான் கருத்து தெரிவித்ததாக தவறான பதிவு ஒன்று ட்வீட்டாகவும் வாட்சப்பிலும் வலம் வருகிறது. அது தவறானது. பொய். எனக்கும் அதற்கும் தொடர்பு கிடையாது. நான் வெளியூரில் இருக்கிறேன். காவிரி விவகாரம் தொடர்பாக எந்தவொரு சமூக வலைத்தளத்திலும் நான் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. எனவே அதுபோன்ற பதிவுகளை உதாசீனப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்."

    English summary
    Actress Suhasini has denied that she never say anything on Cauvery issue in social media.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X