Just In
- 25 min ago
பாஜக சார்பில் போட்டியிடுகிறேனா? எனக்கு அரசியல்னா என்னன்னே தெரியாதே.. பிரபல நடிகை பளிச்!
- 58 min ago
இவ்ளோ க்ளோஸ் ஆகாதும்மா.. விக்னேஷ் சிவனுடன் ஓவர் நெருக்கத்தில் நயன்தாரா.. காண்டாகும் ரசிகர்கள்!
- 1 hr ago
திரும்பிச் செல்லுங்கள்.. படப்பிடிப்பில் விவசாயிகள் மீண்டும் ஆர்ப்பாட்டம்.. ஷூட்டிங் கேன்சல்!
- 1 hr ago
குருவாயூரில் சாமி தரிசனம் செய்த சோம்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் முதன்முறையாக வெளியிட்ட வீடியோ!
Don't Miss!
- News
பிரசாந்த் கிஷோர் டைரக்டர்...ஸ்டாலின் நடிகர்...சொல்வது எடப்பாடியார்
- Sports
அதே தப்பு.. இவ்ளோ காசை வேஸ்ட் பண்ணிட்டீங்களே.. சிக்கலில் சிஎஸ்கே.. கடுப்பில் ரசிகர்கள்!
- Finance
Budget 2021.. ஹெல்த்கேர் துறையில் ஒதுக்கீடு 40% வரை அதிகரிக்கலாம்.. எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?
- Lifestyle
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- Automobiles
தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்.. எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
லாக்டவுனில் நடிகை சுகாசினி இயக்கிய ’சின்னஞ்சிறு கிளியே..’ ஐபோன்லயே மொத்த படத்தையும் எடுத்தாராமே?
சென்னை: நடிகை சுகாசினி இந்த லாக்டவுனில் குறும்படம் ஒன்றை தனது ஐபோனில் எடுத்திருக்கிறார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிரட்டி வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் இதுவரை சுமார் 40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் இரண்டரை லட்சத்துக்கும் அதிகமானோர் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.
எவ்வளவு நாள்தான் இப்படி இருக்கறது? ஓடிடி-க்காக உருவாகும் படத்தில் அடுத்த அவதாரம் எடுக்கும் நடிகர்

கொரோனா வைரஸ்
இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 56 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்று கூறப்படுகிறது. லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டும் கொரோனா பரவி வருவதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

குறும்படம்
இந்நிலையில் லாக்டவுன் காரணமாக பொதுமக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். நடிகர், நடிகைகள் வீடுகளில் இருந்தபடி தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை வீடியோ எடுத்து தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகை சுகாசினி இந்த லாக்டவுனில் குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார்.

அஹானா கிருஷ்ணா
‘என் லாக்டவுன் கதைகள். என் முதல் குறும்படம், என் ஐபோனிலேயே எடுக்கப்பட்ட படம். டெக்னீஷியன்ஸ், லைட்ஸ் இல்லாமல் எடுக்கப்பட்ட படம். கெவின் தாஸ் எடிட்டிங். ஜேம்ஸ் வசந்தன் இசை அமைத்துள்ளார். விரைவில் வெளியாகும்' என்று தெரிவித்துள்ளார் சுகாசினி. 20 நிமிடம் ஓடும் இந்தக் குறும்படத்தில், இதில், மலையாளத்தில் லூகா, பதினெட்டாம் படி உட்பட சில படங்களில் நடித்துள்ள அஹானா கிருஷ்ணா, சாருஹாசன், சுகாசினி உட்பட பலர் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் ஆர்வம்
இதற்கு சின்னஞ்சிறு கிளியே என்று டைட்டில் வைத்துள்ளார் அவர். இதையடுத்து நடிகை குஷ்பு, நடிகர் மனோபாலா உள்ளிட்ட சில திரையுலகினரும் ஏராளமான ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தை பார்க்க ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். நடிகை சுகாசினி, ஏற்கனவே அரவிந்த்சாமி, அனு ஹாசன் நடித்த 'இந்திரா' படத்தை இயக்கியுள்ளார்.