»   »  சான்ஸ் இல்லை-துணை நடிகை தற்கொலை

சான்ஸ் இல்லை-துணை நடிகை தற்கொலை

Subscribe to Oneindia Tamil

பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததால் மனம் உடைந்த துணை நடிகை குடிபோதையில் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தில் வசித்து வந்தவர் அலோக்கியா (37). இவர் ஒரு துணை நடிகை. அத்தோடு குரூப் டான்சராகவும் இருந்து வந்தார். இவரது கணவர் சூர்ய நாராயணா மரணமடைந்து விட்டார். 18 வயதான மகன் ரவியுடன் தனியாக வசித்து வந்தார்.


இவருக்கும், கதை வசனகர்த்தா ரகுராமன் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி அலோக்கியாவைப் பார்க்க ரகுராமன் வீட்டுக்கு வருவார். இது ரவிக்குப் பிடிக்கவில்லை. இதனால் அவர் வீட்டுக்கே வருவதில்லையாம்.

இந் நிலையில் இன்று காலை அலோக்கியாவின் வீட்டுக்கு வழக்கமாக வரும் வேலைக்காரப் பெண் லட்சுமி வந்துள்ளார். ஆனால் அலோக்கியாவின் அறை மூடப்பட்டிருந்தது.

சந்தேகமடைந்த அவர் ரகுராமனுக்குத் தகவல் கொடுத்தார். அவர் விரைந்து வந்தார். அக்கம் பக்கத்தினரின் துணையுடன் அறைக் கதவை உடைத்து பார்த்தபோது அலோக்கியா தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சமீப காலமாக அலோக்கியாவுக்கு பட வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் மனம் உடைந்த நிலையில் இருந்தார். இந்த சோகத்தில் குடிப்பழக்கத்திற்கும் அடிமையானார்.

இந் நிலையில் நன்றாக குடித்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil