twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சுஜித் இறப்புக்கு தமிழக அரசின் மெத்தனமே காரணம் - மீரா மிதுன்

    |

    Recommended Video

    சுஜித் இறப்புக்கு தமிழக அரசின் மெத்தனமே காரணம் - மீரா மிதுன்-வீடியோ

    சென்னை: தமிழ்நாடு அரசு சற்று துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்திருந்தால், அந்த குழந்தையை மீட்டு இருக்கலாம். அவர்களின் மெத்தனமான போக்கால் தான் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது என்று மீரா மிதுன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், கூறியுள்ளார். சுஜித்தின் பெற்றோருக்கும் ஆறுதல் கூறியுள்ளார்.

    கடந்த அக்டோபர் 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டி என்ற கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சுஜித் என்ற 2 வயது சிறுவனை மீட்பு பணியில் ஈடுபட்டும் உயிருடன் காப்பாற்ற முடியாமல் போனது. அக்டோபர் 29ஆம் தேதியான நேற்று இறந்த சுஜித்தை அழுகிய நிலையில் வெளியில் எடுத்தனர்.

    Sujit Death have been caused by Government Tender Manner-Meera Mitun

    இந்த சம்பவம் உலகில் உள்ள அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்திய நிலையில் நடிகை மீரா மிதுன் கண்ணீருடன் சுஜித்திற்காக இரங்கல் வீடியோ ஒன்றினை சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார்.

    அந்த வீடியோவில் மீரா மிதுன் அரசு சற்று துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்திருந்தால், அந்த குழந்தையை மீட்டு இருக்கலாம். அவர்களின் மெத்தனமான போக்கால் தான் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது என்றுள்ளார்.

    Sujit Death have been caused by Government Tender Manner-Meera Mitun

    மேலும், மீரா சுஜித்தின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியுள்ளார். உங்கள் குழந்தை ஏதோ ஒரு காரணத்திற்காக தான் இந்த உலகில் பிறந்துள்ளான். அவனது இழப்பு மூலம் பின்வரும் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள பாடம் புகட்டியுள்ளான்.

    என்னது ஐஸ்வர்யா ராய்க்கு 46 வயசாகுதா.... நம்பமுடியலையேஎன்னது ஐஸ்வர்யா ராய்க்கு 46 வயசாகுதா.... நம்பமுடியலையே

    பல குழந்தைகள் இறந்து போகாமல் பாதுகாத்துள்ளான். அவன் பல துயரங்களை சந்தித்து உயிரை பிரிந்துள்ளான். நிச்சயம் அவன் ஆத்மா கடவுளிடம் சென்று இனி அமைதியோடு இருக்கும். இந்த நாட்டிற்கு ஒரு தியாக செம்மலாய் திகல்வான் என்று கூறியுள்ளார் மீரா.

    மிகவும் உருக்கமாக அவர் வெளியிட்டுள்ள இந்த இரங்கல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்னரும் மீரா மிதுன், சுஜித் மீட்புப்பணியின் போது, சாய் பாபா அருளால் நிச்சயம் சுஜித் காப்பாற்றப்படுவார் என்று ஒரு வீடியோ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இப்படி தொடர்ந்து வீடியோ வெளியிட்டு மீரா தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    In a video post released by Meera Mitun, if the Tamil Nadu government has acted swiftly, Child Sujit may have been rescued. They claim that the deaths have been caused by their tender manner. Meera has consoled Sujit's parents.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X