»   »  மகேஷ் பாபுவின் மம்மியாக டோலிவுட்டில் மறுபிரவேசம் செய்யும் சுகன்யா

மகேஷ் பாபுவின் மம்மியாக டோலிவுட்டில் மறுபிரவேசம் செய்யும் சுகன்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: நடிகை சுகன்யா ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கிறார்.

ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் சுகன்யா. அதன் பிறகு திருமணமாகி அமெரிக்கா சென்றவர் கணவரை பிரிந்துவிட்டு தமிழகம் திரும்பினார். தமிழகம் திரும்பிய அவர் படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் புதிய தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கிறார்.

ஸ்ரீமன்துடு

ஸ்ரீமன்துடு

கொரடலா சிவா மகேஷ் பாபு, ஸ்ருதி ஹாஸனை வைத்து இயக்கும் ஸ்ரீமன்துடு படத்தின் மூலம் தான் சுகன்யா டோலிவுட்டில் மறுபிரவேசம் செய்கிறார். படத்தில் மகேஷ் பாபுவின் அம்மாவாக வருகிறார் சுகன்யா.

மகேஷ் பாபு

மகேஷ் பாபு

மகேஷ் பாபு பற்றி சுகன்யா பெருமையாக பேசி வருகிறார். மகேஷ் பாபு கூலான நபர். அவர் அனைவர் மீதும் அக்கறையுடன் இருப்பவர். அவருடன் பணியாற்றுவது இனிமையான அனுபவம் என்கிறார் சுகன்யா.

பரபர ஷூட்டிங்

பரபர ஷூட்டிங்

ஸ்ரீமன்துடு படத்தின் படப்பிடிப்பு பரபரவென நடந்து வருகிறது. படத்தை ரம்ஜான் ஸ்பெஷலாக ஜூலை 17ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வேலை செய்து வருகிறார்கள்.

ஸ்ருதி

ஸ்ருதி

தெலுங்கு திரை உலகில் ஸ்ருதி ஹாஸனுக்கு அவ்வளவு மவுசு உள்ளது. ஒரு பாட்டுக்காவது வந்து ஆடிவிட்டு போங்களேன் என்று தயாரிப்பாளர்கள் கேட்கும் அளவுக்கு உள்ளது ஸ்ருதியின் மார்க்கெட்.

டிஎஸ்பி

டிஎஸ்பி

மகேஷ் பாபுவின் படத்திற்கு துள்ளல் இசைக்கு பெயர் போன தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். படத்தில் மகேஷ்பாபுவுக்கு அம்மாவாக நடிக்கும் சுகன்யா பார்க்க அவருக்கு அக்கா போன்று தெரிகிறார்.

English summary
Sukanya is making a comeback to Telugu movies through Mahesh Babu starrer Srimanthudu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil