»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

அமெரிக்காவைச் சேர்ந்தவரை திருமணம் செய்த நடிகை சுகன்யா, இப்போது அவரைப் பிரிந்துள்ளார்.கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்க அவர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. ஆனால், அதைசுகன்யா மறுத்துள்ளார்.

சென்னை கலாஷேத்ராவின் பரத நாட்டிய மாணவியான சுகன்யா, இயக்குனர் பாரதிராஜாவின் புது நெல்லு புதுநாத்து படத்தில் கிராமத்துப் பெண்ணாக அறிமுகமானார்.

சின்ன கவுண்டர், சின்ன ஜமீன், வால்டர் வெற்றிவேல், சோலையம்மா, திருமதி பழனிச்சாமி, செந்தமிழ் பாட்டுஉள்பட ஏராளமான படங்களில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தார். தமிழ் தவிர மலையாளம், தெலுங்குமற்றும் கன்னடத்திலும் நடித்துள்ளார்.

இவர் முன்னணியில் இருந்தபோது இவருக்கும் அப்போது அதிமுக அமைச்சரவையில் கொடி கட்டிப்பறந்தவருக்கும் ( இப்போது தனிக் கட்சி நடத்துபவர்) இது என்று அரசல் புரசலாகப் பேசப்பட்டது. ஆனால்,அதை சுகன்யா மறுத்தார்.

பட வாய்ப்புகள் எல்லாம் குறைந்துவிட, டிவிக்குப் போனார். கடந்த ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஸ்ரீதர் என்றசாப்ட்வேர் என்ஜினியரை மணந்தார். திருமணம் நியூஜெர்சியில் தான் நடந்தது.

இந் நிலையில் சுகன்யா மீண்டும் நடிக்க விரும்பினார். அதை ஸ்ரீதர் எதிர்த்தார். ஆனால், இருவருக்கும் பெரும்கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இதையடுத்து கணவருடன் சண்டைபோட்டுக் கொண்டு சென்னை வந்த சுகன்யாபெசன்ட் நகரில் தனியே வசித்து வருகிறார். கணவர் அமெரிக்காவில் தான் உள்ளார்.

இப்போது சில டிவிக்களில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். பரதநாட்டியம் தொடர்பான நிகழ்ச்சியை தொகுத்துவழங்கி வருகிறார். கேம்பஸ் என்று ஒரு தமிழ் படத்திலும் புக் ஆகியுள்ளார். இதை ஸ்ரீதர் எதிர்த்து வருவதால்அவரிடமிருந்து விவாகரத்து கேட்க சுகன்யா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

ஆனால், சுகன்யாவைப் பிரிய ஸ்ரீதர் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந் நிலையில் இந்த விவகாரத்து செய்திகளை சுகன்யா மறுத்துள்ளார். கணவரை நான் விவகாரத்து செய்யப்போவதில்லை. நாங்கள் சேர்ந்து தான் வாழ்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil