»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

நடிகர்கள் விஜய், ரவி கிருஷ்ணா நடிக்கும் சுக்ரன் படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்கக் கோரி சென்னை சிவில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுக்ரன் படத்தை எஸ்.ஏ.சந்திரசேரகன் இயக்குகிறார். இந்தப் படத்தில் விஜய் கெளரவ வேடத்திலும், ரவிகிருஷ்ணா கதாநாயகனாகவும்,நதிஷா (பழைய பெயர் அனிதா) கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டு, விரைவில் வெளிவரத் தயாராக சுக்ரன் உள்ளது.

இந் நிலையில் படத்தை வெளியிடத் தடைகோரி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மாஸ்டர் மூவி படத் தயாரிப்பு நிறுவனத்தின்உரிமையாளர் கந்தசாமி சார்பில் அவரது பவர் ஆப் அட்டர்னியான சங்கர் என்பவர் சென்னை சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தமனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

சுக்ரன் என்ற பெயரை தென்னிந்திய திரைப்படம் மற்றும் டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நாங்கள் பதிவு செய்திருக்கிறோம்.சுக்ரன் பெயரை நாங்கள் பதிவு செய்திருப்பது எஸ்.ஏ.சந்திரசேகரன், தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் ஆகியோருக்குத் தெரியும்.

இருப்பினும் சுக்ரன் என்கிற பெயரை தங்கள் படத்திற்காக தமிழ் திரைப்பட கவுன்சிலில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பதிவுசெய்திருக்கிறார்கள். ஆனால் நாங்கள் அதற்கு முன்பு ஜனவரி மாதமே சுக்ரன் பெயரை பதிவு செய்திருக்கிறோம்.

இது தொடர்பாக தென்னிந்திய திரைப்படம் மற்றும் டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நாங்கள் புகார் கொடுத்தோம். ஆனால்அவர்கள், படத்தின் பெயரை மாற்றிக் கொள்ளுமாறு எங்களுக்கு அறிவுரை கூறினார்கள்.

தற்போது சுக்ரன் படம் வெளியாகும் நிலையில் உள்ளது. எனவே இப்படத்தை வெளியிடுவதற்கு எஸ்.ஏ.சந்திரசேகரன், ஏ.எம்.ரத்தினம்மற்றும் வினியோகிஸ்தர்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை வரும் 1ம் தேதி நடக்கிறது.


Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil