»   »  'பஜ்ரங்கி பைஜான்' வரிசையில் சல்மானுக்கு இன்னொரு பிளாக்பஸ்டர்... 'சுல்தானைப்' புகழும் ரசிகர்கள்!

'பஜ்ரங்கி பைஜான்' வரிசையில் சல்மானுக்கு இன்னொரு பிளாக்பஸ்டர்... 'சுல்தானைப்' புகழும் ரசிகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சல்மான் கான்-அனுஷ்கா சர்மா நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் 'சுல்தான்' திரைப்படம் நன்றாக இருப்பதாக, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியாகியிருக்கும் 'சுல்தான்' மொழிகளைக் கடந்து பெரும்பாலான ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது.

மல்யுத்த வீரராக நடித்திருக்கும் சல்மானும், அனுஷ்காவும் சுல்தானில் தங்கள் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாக, பஜ்ரங்கி பைஜான் இயக்குநர் கபீர் கானும் தனது பங்கிற்கு பாராட்டி இருக்கிறார்.

சல்மானின் சுல்தானுக்கு ரசிகர்களின் ரியாஷன்கள் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

எல்லாமே இருக்கு

ஆக்ஷன் தொடங்கி இப்படத்தில் எல்லாமே இருக்கிறது. சுல்தான் ஒரு முழுமையான பொழுதுபோக்கு படம் என ஷேக்லின் பாராட்டி இருக்கிறார்.

பிளாக்பஸ்டர்

ஹிட், சூப்பர் ஹிட் படங்களைக் கொடுக்காமல் எல்லாமே பிளாக்பஸ்டர் படங்களாக சல்மான் கொடுத்து வருகிறார் என சுதன்ஷு தெரிவித்திருக்கிறார்.

ஆவேசம்

சுல்தான் பார்த்தேன்.ஆவேசமான படம் சல்மான், அனுஷ்கா சர்மா இருவரும் மிகச்சிறந்த நடிப்பை வெளிபடுதியுள்ளனர் என காஜல் பாராட்டியிருக்கிறார்.

3 மணி நேரம்

சுல்தான் 3 மணி நேரமென்றாலும் படத்தை ரசிக்கும்படியான சிறந்த தருணங்கள் உள்ளதாக ஸ்ரீஷா தெரிவித்திருக்கிறார்.

இதுபோல ஏராளமான ரசிகர்கள் 'சுல்தான்' தங்களுக்குப் பிடித்திருப்பதாக கருத்துத் தெரிவித்துள்ளனர். இதனால் சல்மானின் முந்தைய பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டுகளை, 'சுல்தான்' முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Salman Khan-Anushka Sharma Starrer Sultan Got Positive Reactions from Fans and Reviewers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil