»   »  முதல்நாளில் 40 கோடிகளைத் தாண்டியது சல்மான்-அனுஷ்கா சர்மாவின் 'சுல்தான்'

முதல்நாளில் 40 கோடிகளைத் தாண்டியது சல்மான்-அனுஷ்கா சர்மாவின் 'சுல்தான்'

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நேற்று வெளியான 'சுல்தான்' திரைப்படம் வசூலில் 40 கோடிகளைத் தாண்டியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சல்மான் கான் - அனுஷ்கா சர்மா மல்யுத்த வீரர், வீராங்கனையாக நடித்திருக்கும் இப்படம் உலகம் முழுவதும் நேற்று 5௦௦௦ ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது.

Sultan Opening day Box Office Collection

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியான இப்படத்திற்கு திரையிட்ட இடமெல்லாம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விடுமுறை நாளாக இல்லாவிட்டாலும் கூட நேற்று இப்படத்தின் வசூல் 40 கோடிகளைத் தாண்டியதாகத் தெரிகிறது.

Sultan Opening day Box Office Collection

இதன் மூலம் ஷாரூக்கானின் 'ஹேப்பி நியூ இயர்' மற்றும் சல்மான் நடிப்பில் கடைசியாக வெளியான 'பிரேம் ரத்தன் தான் பாயோ' ஆகிய படங்களின் வசூல் வரலாற்றை சுல்தான் முறியடித்துள்ளது.

இன்று ரம்ஜான் விடுமுறை என்பதால் இப்படத்தின் வசூல் 100 கோடியைத் தாண்டினாலும் ஆச்சரியமில்லை என்று, பாலிவுட் நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Sultan Opening day Box Office Collection

அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இப்படத்தை யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. வெளியீட்டிற்கு முந்தைய நாள் இப்படம் ஆன்லைனில் திருட்டுத்தனமாக வெளியானது குறிப்பிடத்தக்கது.

English summary
Box Office: Sources Said Salman Khan's Sultan has been Collected more than 40 Crores in Opening Day.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil