»   »  5 நாட்களில் 340 கோடி... மலைக்க வைக்கும் சுல்தான் வசூல்!

5 நாட்களில் 340 கோடி... மலைக்க வைக்கும் சுல்தான் வசூல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியான சல்மான் கானின் சுல்தான் படம், 5 நாள்களில் ரூ. 300 கோடி வசூலித்து சாதனை செய்துள்ளது.

கடந்த புதன்கிழமைை வெளியானது சுல்தான். பிரமாதமான வசூலுடன் தொடங்கிய இந்தப் படம் இந்தியாவில் மட்டும் முதல் வார முடிவில் ரூ. 252 கோடி வசூலித்துள்ளது. வெளிநாட்டில் ரூ. 92 கோடி வசூலித்துள்ளது.

5 நாட்களில் மொத்த வசூலாக ரூ. 344 கோடியைப் பெற்றுள்ளது சுல்தான்.

Sultan rakes Rs 344 cr in just 5 days

சல்மான் கான் படங்களில் மட்டுமில்லாமல் வேறெந்த பாலிவுட் படமும் முதல் 5 நாள்களில் இந்தளவுக்கு வசூல் செய்தது இல்லை.

ரூ. 100 கோடி வசூலைத் தொட்ட பாலிவுட் நடிகர்களில் முதலிடத்தில் உள்ளார் சல்மான் கான். மற்ற நடிகர்களை விடவும் அவருடைய படங்கள்தான் அதிகமுறை அதாவது 11 முறை ரூ. 100 கோடி வசூலைத் தாண்டியுள்ளன. அடுத்த இடத்தில் உள்ளார் ஷாருக் கான். இவர் படங்கள் 6 முறை ரூ 100 கோடி வசூலைத் தாண்டியுள்ளன.

English summary
Sakman Khan's Sultan raked Rs 344 cr all over the world in just 5 days.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil