»   »  நடிகையை திருமணம் செய்து ஓராண்டுக்குள் சுமங்கலி டிவி சீரியல் நடிகர் தற்கொலை

நடிகையை திருமணம் செய்து ஓராண்டுக்குள் சுமங்கலி டிவி சீரியல் நடிகர் தற்கொலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: சுமங்கலி தொலைக்காட்சி தொடரில் ஹீரோவாக நடித்து வந்த பிரதீப் ஹைதராபாத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சின்னத்திரை பிரபலங்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அண்மையில் சின்னத்திரை நடிகை நந்தினியின் கணவர் கார்த்திக் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் மேலும் ஒரு சின்னத்திரை பிரபலம் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சுமங்கலி

சுமங்கலி

பிரபல தொலைக்காட்சி சேனலில் நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் சுமங்கலி. இந்த தொடரின் ஹீரோவாக நடித்து வந்தவர் பிரதீப்.

தற்கொலை

தற்கொலை

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தின் புப்பலகுடா பகுதியில் உள்ள தனது வீட்டில் பிரதீப் இன்று காலை 4 மணிக்கு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குடும்ப பிரச்சனை

குடும்ப பிரச்சனை

குடும்ப பிரச்சனையால் பிரதீப் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமணம்

திருமணம்

பிரதீப்புக்கும், பாசமலர் தொடரில் அவருடன் நடித்த பவானி ரெட்டிக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பிரதீப்பின் தற்கொலை விவரம் அறிந்து அவருடன் பணியாற்றிவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

English summary
Sumangali television serial actor Pradeep has hanged himself to death at this residence in Hyderabad on wednesday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil