நாளை ஆஜராவாரா மாதம்பட்டி ரங்கராஜ்?.. ஜாய் கிரிஸில்டாவுக்கு கிடைக்குமா நீதி?.. என்ன நடக்கப்போகுதோ?

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிஸில்டா விவகாரம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை கடந்த சில மாதங்களாகவே ஏற்ப்டுத்திவருகிறது. நீதிமன்றமும் கிரிஸில்டாவுக்கு ஆதரவான தீர்ப்பை கொடுத்த சூழலில்; மாதம்பட்டி பற்றி தொடர்ந்து பதிவுகளை போட்டுவருகிறார். இந்நிலையில் இரண்டு பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருப்பதால் நாளை ரங்கராஜ் ஆஜராவாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து இரண்டு மகன்களுக்கு தந்தையாக இருக்கிறார். இப்படிப்பட்ட நிலைமையில் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார். அதுதொடர்பான புகைப்படங்களை கிரிஸில்டா வெளியிட பரபரப்பு பற்றிக்கொண்டது திரைத்துறையில்.

மௌனம் காக்கும் மாதம்பட்டி: அந்த புகைப்படங்கள் வெளியான சில நாட்களிலேயே முதல் மனைவி ஸ்ருதியுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அது இரண்டாவது மனைவிக்கு பெரிய கோபத்தை ஏற்படுத்தியது. அதனையடுத்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அந்து புகார் அளித்தார். அந்தப் புகாரில், 'திருமணம் செய்துகொள்வதாக சொல்லி என்னை கர்ப்பமாக்கி மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றிவிட்டார். அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து ரங்கராஜும் மௌனமே காத்தார்.

Summons have been sent to Madhampatty Rangaraj and Joy Crizildaa
Photo Credit:

நீதிமன்றம் சப்போர்ட்: இந்தப் புகார் கொடுத்தது மட்டுமில்லாமல் தனக்கு முத்தம் கொடுத்தது, தன்னிடம் காதலோடு பேசியது என அனைத்து புகைப்படங்கள், வீடியோக்களை வரிசையாக இறக்கிக்கொண்டே இருந்தார் கிரிஸில்டா. இனிமேலும் மௌனமாக இருந்தாலும் ஒத்துவராது என்று முடிவெடுத்து, 'தன்னை பற்றி ஜாய் பேசுவதற்கு தடை விதிக்க வேண்டும்' என்று நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அதெல்லாம் முடியாது என்று நீதிமன்றம் கையை விரித்துவிட்டது.

சாபம் விடும் ஜாய்: நீதிமன்றத்தின் அந்த உத்தரவுக்கு பிறகு ஜாலியான ஜாய், மாதம்பட்டி பற்றி தொடர்ந்து பதிவுகளை இறக்குகிறார். முக்கியமாக தனது வயிற்றில் வளரும் குழந்தையின் சாபம் உங்களை சும்மாவே விடாது என்றும் காட்டமாக கூறிவருகிறார். அதுமட்டுமின்றி சட்டப்படிப்பையும் அவர் படிக்க தொடங்கியிருக்கிறார். ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதியும் வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

பறந்த சம்மன்: இதற்கிடையே சில வாரங்களுக்கு முன்பு ஜாயிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் மாதம்பட்டி ரங்கராஜிடம் விசாரணை இதுவரை நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜாய் கிரிஸில்டா, மாதம்பட்டி என இரண்டு பேருக்குமே சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. எனவே நாளை இந்த விவகாரத்தில் இரண்டு பேரும் சொல்லப்போவது என்ன; மாதம்பட்டியார் ஆஜராவாரா என்ற கேள்வி பலரிடம் எழுந்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X