Announcement Alert...தலைவர் 169 ஆ – பீஸ்ட் ஆ... சன் பிக்சர்ஸ் வைத்த சஸ்பென்ஸ்

சென்னை : இன்று மாலை முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட உள்ளாக சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்பெஷல் வீடியோ ஒன்றுடன் வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் தலைவர் 169 ஆ அல்லது பீஸ்ட் ஆ என கேட்டு வருகின்றனர்.

சன் பிக்சர்ஸ் அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் மெகா பட்ஜெட் படங்களை தயாரித்து வருகிறது. அண்ணாத்த படத்தை தொடர்ந்து, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், விஜய்யின் பீஸ்ட் படங்களை தயாரித்து வருகிறது. இதில் எதற்கும் துணிந்தவன் மார்ச் 10 ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பீஸ்ட் படமும் ரிலீசிற்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

பிப்ரவரி 14 ல் பீஸ்ட் அரபிக்குத்து

பிப்ரவரி 14 ல் பீஸ்ட் அரபிக்குத்து

பீஸ்ட் படத்தின் ரிலீஸ் எப்போது என கேட்டு வந்த ரசிகர்களுக்கு, புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டு குஷிப்படுத்தியது சன் பிக்சர்ஸ். அதாவது பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட் சிங்கிளான அரபிக்குத்து பாடல் பிப்ரவரி 14 ம் தேதி வெளியிடப்படும் என அறிவித்தது. இதற்காக அனிருத், நெல்சன் திலீப்குமார், சிவகார்த்திகேயன் மூன்று பேரும் பாட்டை தயார் செய்து, விஜய்யிடம் போனில் பேசவது போலவும், பதிலுக்கு இவர்களை விஜய் கலாய்ப்பது போலவும் ஸ்பெஷலான ப்ரோமோ வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்கள்.

ப்ரோமோவிற்கே 10 மில்லியன்

ப்ரோமோவிற்கே 10 மில்லியன்

இந்த ப்ரோமோ வெளியிடப்பட்ட 24 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளை பெற்றது. இதைத் தொடர்ந்து அரபிக் குத்து பாடலுக்கான அடுத்த ப்ரோமோவை பிப்ரவரி 10 ம் தேதி வெளியிட போகிறார்கள் என்றும், இதில் விஜய்யுடன் இருப்பார்கள் என்றும், சிவகார்த்திகேயன் எழுதிய பாடலை விஜய் தனது சொந்த குரலில் பாடுவது போல் இருக்கும் என்றும் கூறப்பட்டது.

இன்று டபுள் ட்ரீட்டா

இன்று டபுள் ட்ரீட்டா

அதே சமயம் பிப்ரவரி 10 ம் தேதி ரஜினியின் அடுத்த படமான தலைவர் 169 படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படலாம் என்றும் கூறப்பட்டது. தலைவர் 169 படத்தையும் சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்க உள்ளதாம். நெல்சன் திலீப்குமார் தான் ரஜினியை அடுத்த இயக்க போவதாகவும், இந்த படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்க போகிறார் என்றும் கூறப்பட்டது. பிப்ரவரி 10 ம் தேதி ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு சன் பிக்சர்ஸ் ட்ரீட் கொடுக்க போவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.

சன் பிக்சர்ஸ் விடுத்த அலர்ட்

சன் பிக்சர்ஸ் விடுத்த அலர்ட்

இந்நிலையில் Announcement Alert என்ற வாசகத்துடன் இன்று மாலை 6 மணிக்கு என குறிப்பிட்டு, பெரிய கடிகாரம் சுற்றி வந்து 6 மணியை காட்டுவது போல் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் இது தலைவர் 169 அறிவிப்பா அல்லது பீஸ்ட் பற்றிய அறிவிப்பா என ஆர்வமாக கேட்டு வருகிறார்கள்.

தலைவர் 169 அறிவிப்பா

தலைவர் 169 அறிவிப்பா

அதே சமயம் இன்று சன் பிக்சர்ஸ் வெளியிட உள்ளது தலைவர் 169 பற்றிய அறிவிப்பு தான். சிவகார்த்திகேயன், விஜய்யை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் ரஜினியை இயக்க போகிறார். தலைவர் கம்மிங் என பல விதமாக கமெண்ட் செய்து, தலைவர் 169 பற்றிய அறிவிப்பு தான் இன்று வர உள்ளது என்பதை உறுதியாக, நம்பிக்கையுடன் தெரிவித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X