சன் பிக்சர்ஸின் அடுத்த ரிலீஸ் பிளான்...யாருடைய படம் தெரியுமா ?

சென்னை : ரஜினி, விஜய், சூர்யா என அடுத்தடுத்து டாப் ஸ்டார்களின் படங்களை தயாரித்தும், ரிலீஸ் செய்தும் வருகிறது சன் பிக்சர்ஸ். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படங்களும் தொடர்ந்து பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்று வருகின்றன.

ரஜினியின் அண்ணாத்த படத்தை தொடர்ந்து சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படமும் தியேட்டர்களில் ரிலீசாகி குடும்ப ஆடியன்ஸ் கொண்டாடும் படமாக இருந்து வருகிறது. எதற்கும் துணிந்தவன் படமும் கோடிக்கணக்கில் வசூலை அள்ளி வருகிறது. இதைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள அடுத்த படமான விஜய்யின் பீஸ்ட் படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

அடுத்த பிளான் இது தானா

அடுத்த பிளான் இது தானா

பீஸ்ட் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட்டும், எதற்கும் துணிந்தவனின் வெற்றியை கொண்டாடியும் வருகிறது சன் பிக்சர்ஸ். இந்நிலையில் பீஸ்ட் பட ரிலீசை தொடர்ந்து அடுத்ததாக தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் படத்தின் ரிலீஸ் வேலைகளை சன் பிக்சர்ஸ் கவனிக்க உள்ளதாம்.

தீவிர போஸ்ட் ப்ரொடக்ஷன்

தீவிர போஸ்ட் ப்ரொடக்ஷன்

டைரக்டர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்தள்ள ரொமான்டிக் காமெடி படம் திருச்சிற்றம்பலம். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் ராஷி கன்னா, நித்யா மேனன், பிரியா பவானிசங்கர், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். 2021 ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த படத்தின் ஷுட்டிங் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் டப்பிங் பணிகள் துவங்கி நடந்து வருவதாக கூறினார்கள்.

 தள்ளி போன ரிலீஸ்

தள்ளி போன ரிலீஸ்

முதலில் மார்ச் மாதத்தில் திருச்சிற்றம்பலம் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் பிப்ரவரியில் ரிலீசாக இருந்த எதற்கும் துணிந்தவன் படம் மார்ச் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டதாலும், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முடிவடைய கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால் திருச்சிற்றம்பலம் படத்தின் ரிலீசை தள்ளி வைத்துள்ளார்களாம்.

 அடுத்த ரிலீஸ் இவர் படம் தானா

அடுத்த ரிலீஸ் இவர் படம் தானா

லேட்டஸ்ட் தகவலின் படி ஜுலை மாதம் ஒன்றாம் தேதி தியேட்டர்களில் திருச்சிற்றம்பலம் படத்தை ரிலீஸ் செய்ய சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளதாம். தனுஷ் நடித்த தி கிரே மேன், அத்ரங்கி ரே, மாறன் என மூன்று படங்களும் அடுத்தடுத்து ஃபிளாப் ஆகி உள்ளன. இதனால் அடுத்து அவர் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படத்தை தான் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த படம் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X