ஏப்ரல் 2 ல் பீஸ்ட் டிரைலர்...நம்ம ஆட்டம் இனி வேற மாறி இருக்கும்...மாஸாக அறிவித்த சன் பிக்சர்ஸ்

சென்னை : ஏப்ரல் 2 ம் தேதி விஜய்யின் பீஸ்ட் பட டிரைலர் வெளியிடப்பட உள்ளதாக சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சத்தமில்லாமல், சஸ்பென்சாக வித்தியாசமான வீடியோவுடன் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ம் தேதி ரிலீசாக உள்ளது. இதனால் படத்தின் அப்டேட் எப்போது வரும், டீசர் எப்போது வரும், டிரைலர் எப்போது என விடாமல் சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். ஆனால் எந்த தகவலும் வெளி வராததால் விஜய் ரசிகர்கள் பயங்கர அப்செட்டில் இருக்கிறார்கள்.

எங்களுக்கு பீஸ்ட் டீசர் வேணும்

எங்களுக்கு பீஸ்ட் டீசர் வேணும்

இந்நிலையில் நேற்று பீஸ்ட் டிரைலர் பற்றிய அறிவிப்பு வெளிவர உள்ளதாக தகவல் வெளியாகின. ஆனால் சன் பிக்சர்ஸ் தொடர்ந்து அமைதி காத்து வந்தது. இரண்டு நாட்களுக்கு முன் விஜய் கையில் துப்பாக்கியுடன் இருக்கும் பீஸ்ட் அன்சீன் ஸ்டில் ஒன்றை மட்டும் வெளியிட்ட சன் பிக்சர்ஸ், அதற்கு பிறகு எதுவும் சொல்லாததால் கடுப்பான விஜய் ரசிகர்கள் WeWantBeastTeaser, BeastUpdate, BeastTrailer,BeastTeaser போன்ற ஹேஷ்டேக்குகளை தொடர்ந்து ட்விட்டரில் டிரெண்டிங்கில் டாப்பில் இருக்க வைத்தனர்.

நெல்சன் சொன்ன ஒரு வார்த்தை

நெல்சன் சொன்ன ஒரு வார்த்தை

சன் பிக்சர்ஸ் எதுவும் சொல்லாத நிலையில், டைரக்டர் நெல்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், நாளை என்று மட்டும் போஸ்ட் போட்டார். இது ரசிகர்களை உற்சாகமடைய வைத்தாலும், வெறும் நாளை என்று மட்டும் போட்டுள்ளார். நாளை டீசர் அல்லது டிரைலர் ஏதாவது வெளியிட போகிறார்களா இல்லை அது பற்றிய அறிவிப்பு மட்டும் வர போகிறதா என கேட்டு குழப்பத்தில் இருந்தனர்.

என்னப்பா பண்ணுறீங்க

என்னப்பா பண்ணுறீங்க

டீசர், டிரைலர் மட்டுமல்ல பீஸ்ட் படத்தில் அரபிக்குத்து, ஜாலியோ ஜிம்கானா பாடல் தவிர மூன்றாவதாக மற்றொரு பாடலும் உள்ளதாம். இந்த பாடல் க்ளைமாக்சில் இடம்பெற போகிறதாம். அதனால் இந்த பாடல் பற்றிய அறிவிப்பாக கூட இருக்குமோ என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். படம் ரிலீசாவதற்கு இன்னும் 15 நாட்களே உள்ளது. ஆனால் இதுவரை டீசர், மோஷன் போஸ்டர், க்ளிம்ப்ஸ் என எதுவும் வெளியிடவில்லையே என கேட்டு பொங்கி வந்தனர்.

நம்ம ஆட்டம் இனி வேற மாறி

நம்ம ஆட்டம் இனி வேற மாறி

மாலை 6 மணிக்கு பீஸ்ட் அறிவிப்பு வரும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், நெல்சனோ, சன் பிக்சர்சோ எந்த ட்வீட்டும் போடவில்லை. இதனால் நாளை என சொல்லி நெல்சன் ஏமாற்றி விட்டாரே என ரசிகர்கள் அப்செட் ஆகினர். அந்த சமயத்தில் எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென, விஜய் ஆக்சிஜன் மாஸ்குடன் இருக்கும் க்ளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டது சன் பிக்சர்ஸ். அதோடு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பீஸ்ட் டிரைலர் ஏப்ரல் 2 ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும். நம்ம ஆட்டம் இனிமே வேற மாறி இருக்கும் என கேப்ஷனையும் பதிவிட்டது.

நெல்சனை தெறிக்க விட்ட ரசிகர்கள்

நெல்சனை தெறிக்க விட்ட ரசிகர்கள்

சன் பிக்சர்ஸ் வெளியிட்ட இந்த சஸ்பென்ஸ் ட்வீட்டிற்கு லைக்குகளை குவித்து வருகிறார்கள் விஜய் ரசிகர்கள். பீஸ்ட் டிரைலர் அறிவிப்பை நெல்சன் வெளியிடுவார் என நினைத்து NelsonDilipkumar என்ற ஹேஷ்டேக்கையும் டிரெண்டிங் ஆக்கினர். சன் பிக்சர்சின் இந்த ட்வீட்டை நெல்சனும் ரீட்வீட் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X